×

ஓசூர் கோழியின ஆராய்ச்சி கல்லூரியில் அமைச்சர்கள் ஆய்வு

ஓசூர், டிச.12: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், தமிழ்நாடு கோழியின ஆராய்ச்சி கல்லூரி மற்றும் கால்நடை பண்ணை உள்ளது. இங்கு நாட்டுக்கோழி, காடை வளர்ப்பு குறித்து கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி ஆகியோர் நேரடியாக ஆய்வு செய்தனர்.  கலெக்டர் பிரபாகர், கல்லூரி முதல்வர் டாக்டர் மணி, கால்நடை பராமரிப்பு துணை இயக்குநர் டாக்டர் இளங்கோவன் ஆகியோரும் பங்கேற்றனர்.  கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேசுகையில், ஓசூரில் கோழி இன ஆராய்ச்சி கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில் பயிலும் மாணவர்கள் கோழிகள் பற்றி அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளும் வகையிலும், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி கோழிகளை உற்பத்தி செய்வதற்கும், உற்பத்தி செய்த கோழிகளை எப்படி வளர்ப்பது என்பதை நேரடியாக தெரிந்து கொள்ளும் வகையிலும் கல்லூரியில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

முதல்வர் உத்தரவின்படி, முதலில் தாய் கோழிகளை உற்பத்தி செய்து, அதன் மூலம் கிடைக்கும் முட்டைகளை வைத்து குஞ்சுகளை உற்பத்தி செய்ய இக்கல்லூரியில் திட்டமிடப்பட்டுள்ளது.  இதேபோல், கால்நடை பல்கலைக்கழகத்தின் மூலமாக இயங்கும் பவுல்ட்ரி கல்லூரி, கால்நடை பல்கலைக்கழகத்தினுடைய பண்ணையில் உள்ள 1,600 ஏக்கரில், பண்ணை பாதுகாப்பு கருதி 16 கி.மீ. தூரத்திற்கு முள்வேலி அமைக்க பார்வையிட இருப்பதையும், மற்ற கல்லூரியில் உள்ளவர்கள் அனைவரும் விலங்குகளை பற்றி தெரிந்துக்கொள்ளவும், கால்நடை பல்கலைக்கழகத்தோடு இணைந்து பண்ணையில் உள்ள அனைத்து விதமான கால்நடை உயிரினங்களையும் பராமரிப்பதுடன் சுற்றுலா பயணிகள் பார்வையிடவும் இங்கு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது, என்றார். இந்த ஆய்வின்போது மத்திகிரி கால்நடை பண்ணை இணை இயக்குனர் டாக்டர் இளவரசன், உதவி இயக்குநர்கள் டாக்டர் மோகன்ராஜ், டாக்டர் சண்முகம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags : Hosur ,
× RELATED ஓசூர் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு