×

காவேரிப்பட்டணம் தொழிலதிபர் பி.டி.எஸ் இல்ல திருமண விழா

காவேரிப்பட்டணம், டிச.12: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் தொழிலதிபரும், பி டி.எஸ்.ஜமுனாபால் கோவா நிறுவனரும், காவேரிப்பட்டணம் வேளாண் விற்பனை கூட்டுறவு  சங்க தலைவரும், காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும், வரட்டம்பட்டி நேசனல் மெட்ரிக் பள்ளி சேர்மன் பி.டி.சுந்தரேசன், சுவிதா சுந்தரேசன் இல்ல திருமண விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  மணமகன் கே.எஸ் சீனிவாசன், மணமகள் சாந்தினி ஆகியோரது திருமணத்தை, முன்னாள் அமைச்சரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமி, மங்கையர்க்கரசிமுனுசாமி ஆகியோர் கலந்து கொண்டு தலைமை வகித்தனர்.

நிகழ்ச்சியில் மணமக்களை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், பத்திரப்பதிவு மற்றும் வணிகவரி துறை அமைச்சர் கே.சி.வீரமணி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி, கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் அசோக்குமார், மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மேலும், நிகழ்ச்சியில் மணமக்களின் பெற்றோர்கள் ஆரணிவரதராஜுலு (எ) ராஜா, கவிதாவரதராஜுலு, ஆரணிரமேஷ்பாபு, பிருந்தாரமேஷ் பாபு மற்றும் உறவினர்கள்  அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் கே.எஸ் கோகுலன்  நன்றி கூறினார்.

Tags : Kaveripattinam ,industrialist ,wedding ceremony ,BDS Home ,
× RELATED காவேரிப்பட்டினம் அருகே தபால் வாக்களித்த 101-வயது மூதாட்டி