மதுரையில் ரஜினி பிறந்த நாள் விழா

* பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு ஏற்பாடு

மதுரை, டிச. 12: மதுரை மாநகர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினிகாந்த் பிறந்தநாளை ஒட்டி நகரில் பல்வேறு நிகழ்ச்சிகள், நலத்திட்டப் பணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மதுரை மாநகர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் (35வது வார்டு முதல் 67வது வார்டு வரை) பொறுப்பாளர் எஸ்ஆர் இளங்கோமணி மற்றும் அனிதா ஆர்.சிவானந்தம் (வர்த்தக அணி செயலாளர்), மாநகர் செயற்குழு உறுப்பினர் முத்துபாண்டி இணைந்து நகரில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தங்க ரதம், கோரிப்பாளையம் தர்காவில் பாத்திகா ஓதி சர்க்கரை வழங்குதல் நடக்கிறது.

தொடர்ந்து 35வது வார்டில் நிர்வாகி ஜேசுதாஸ், 37வது வார்டில் பழனி, 38வது வார்டில் கண்ணன், 39வது வார்டில் சத்தியமூர்த்தி, சிவ கருப்பசாமி மற்றும் 40வது வார்டில் ரஜினி வைரம், வடமலையான் ஆகியோர் தலைமையில் நலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வார்டு 41ல் சரவணன் திருப்பதிராஜ், 43ல் மணிவண்ணன், ரஜினி முத்து, 45ல் காளிமுத்து, 46ல் வினாயகம் சந்திரன், 47ல் முருகானந்தம், ராஜா, 48ல் மணிகண்டன், தனபால் தலைமையில் பல நற்பணிகள் நடக்கிறது. இத்துடன் 51வது வார்டில் படையப்பா முருகன் தலைமையில் வேட்டி, சேலை வழங்குதல், வார்டு 56ல் ரவிசந்திரன் தலைமையில் 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம், 57ல் முருகானந்தம் தலைமையில் சர்க்கரை நோய் பரிசோதனை முகாம், 60ல் முத்துகுமார் தலைமையில் அன்னதானம் நிகழ்ச்சிகள் நடக்கிறது.

Related Stories: