பாரதியார் பிறந்தநாள் விழா தேசியக் கவியாக அறிவிக்க கோரிக்கை

மதுரை, டிச. 12: மதுரையில் பாரதியார் பிறந்தநாள் விழாவை ஒட்டி, சேதுபதி பள்ளியில் உள்ள அவரது சிலைக்கு நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மதுரை அமுதசுரபி கலை மன்றம் சார்பில் மாணவர்கள் பாரதி வேடமணிந்து வந்து, பாரதி பாடல்களை பாடி, அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினர். மன்ற தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் கந்தசாமி, சிவசங்கரகுமார், சுந்தரேசன், முரளி, பாபு ராஜேந்திர பிரசாத், ஆப்ரகாம், மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தலைவர் சாமிதுரை, அரசு டாக்டர் சங்குமணி மாலை அணிவித்தனர். பாரதியாரை தேசியக் கவியாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். மதுரையில் பாரதியாருக்கு முழு உருவச்சிலை அமைக்க வேண்டும். கவிதைப் புத்தகங்களை பள்ளி மாணவர்களுக்கு அரசு இலவசமாக வழங்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சேதுபதி பள்ளி தலைமையாசிரியர் கோபாலகிருஷ்ணன், தமிழாசிரியர் பொன் சந்திரசேகரன், நிலா சேவை மைய தலைவர் கவிக்குயில் கணேசன், ஜேசிஐ மதுரை எக்செல் தலைவர் ரத்தீஷ்பாபு, ரோட்டரி கிளப் தலைவர் நாகராஜன், கனகமகால் கார்த்திகேயன், தொண்டுப்புறா வெங்கட்ராமன், திருவள்ளுவர் கழக நிர்வாகி முருகேசன் மாலை அணிவித்தனர்.

பாரதி தேசிய பேரவை நிர்வாகிகள் ஜான்மோசஸ், ராஜேந்திரன், தமிழ்நாடு பிராமணர் சங்க நிர்வாகிகள் இல. அமுதன், பக்தவத்சலம், ராமகிருஷ்ணன், வெங்கடேஷ் மாலை அணிவித்தனர். மதுரையை அடுத்த ஒத்தக்கடை அரசு தொடக்கப்பள்ளியில் பாரதி பிறந்தநாள் விழா தலைமையாசிரியர் தென்னவன் தலைமையில் நடந்தது. பூலாம்பட்டி அரசுப்பள்ளி தலைமையாசிரியை சார்லட், பாரதியின் படத்திற்கு மாலை அணிவித்து, பெண் விடுதலை குறித்து பேசினார். பேச்சு, கவிதை, ஓவியம், வினாடி வினா, கட்டுரை, மாறுவேடம் உள்பல பல போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவி நிலபர் நிஷா குழுவினரின் கும்மி நடனம், பாரதி பாடல்கள் நடனம் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Related Stories: