கொடைக்கானல் பேத்துப்பாறையில் ஆதிமனிதர் குகைகளை பாதுகாக்க அனுமதி

கொடைக்கானல், டிச. 12:  கொடைக்கானல் பெருமாள்மலையை அடுத்துள்ள பேத்துப்பாறையில் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிமனிதர்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாக பல குகைகள் உள்ளன. சுற்றுலா பயணிகள் பார்த்தும் செல்லும் இக்குகைகள் பராமரிப்பில்லாமல் சேதமடைந்து வந்தன. இதனை பாதுகாக் கோரி பேத்துப்பாறை மாரியம்மன் கோயில் அமைப்பின் சார்பில் கடந்த அக்.30ல் கலெக்டர் வினய்க்கு மனு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கலெக்டர், அக்கோயில் அமைப்பிற்கு   குகைகளை வேலி அமைத்து பாதுகாக்க அனுமதி வழங்கினார். அதன்படி நேற்று கோயில் அமைப்பு தலைவர் மகேந்திரன் தலைமையில் வேலி அமைப்பதற்கு பூமி பூஜை நடந்தது. ஆதிமனிதர்கள் வாழ்ந்த குகைகளை சுற்றுலாத்தலம் வாய்ந்த பகுதியாக அறிவிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கூறினர்.

Related Stories: