பூசணி விலை கடும் வீழ்ச்சி

ஒட்டன்சத்திரம், டிச. 12:  வரத்து அதிகரிப்பால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் பூசணிக்காய் ஒரு கிலோ ரூ.1க்கு விற்கப்படுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

ஒட்டன்சத்திரம் அருகே தங்கச்சியம்மாபட்டி, விருப்பாட்சி, அம்பிளிக்கை, கள்ளிமந்தையம், இடையகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பூசணிக்காய் அதிகளவு பயிரிடப்பட்டுள்ளது. கடந்த மாதங்களில் பெய்த மழை காரணமாக பூசணி விளைச்சல் அமோகமாக உள்ளது. இதனால் ஒட்டன்சத்திரம் காந்தி காய்கனி மார்க்கெட்டில் பூசணி வரத்து அதிகரித்து விலையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.

கடந்த மாதம் ஒரு கிலோ பூசணி ரூ.8 வரை மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது ஒரு கிலோ பூசணி ரூ.1 முதல் ரூ.2 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். பூசணி விவசாயிகள் கூறியதாவது: ‘‘கடந்த மாதத்தை விட பூசணி விலை  3 மடங்கு குறைந்துள்ளது. விதை நடவு , ஆட்கூலி, அறுவடை செலவு கூட கிடைக்காததால் அவதிப்பட்டு வருகிறோம். இதேநிலை நீடித்தால் பூசணியை செடியிலே விட்டு விடலாம் என்ற நிலையில் உள்ளோம்’’ என்றனர்.

Related Stories: