நத்தத்தில் உடைந்த குடிநீர் குழாய்கள் சீரமைப்பு

நத்தம், டிச. 12:  தினகரன் செய்தி எதிரொலியாக நத்தத்தில் உடைந்த குடிநீர் குழாய்கள் சீரமைக்கப்பட்டன.  நத்தம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நகரின் பல்வேறு இடங்களில் மேல்நிலை தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளது. இதில் புன்னப்பட்டி, திருமணிமுத்தாறுவில் உள்ள ஆர்எஸ் 115 போன்ற நீர்நிலைகளிலிருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு குழாய்கள் மூலம் இந்த தொட்டிகளில் ஏற்றி விநியோகித்து வருகின்றனர். மேலும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் பெறக்கூடிய தண்ணீரையும் தொட்டிகளில் நிரப்பி வழங்கி வருகின்றனர்.

தர்பார் நகர், அய்யாபட்டி சாலை, மயான சாலை உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் குழாய் சேதமடைந்து கடந்த சில மாதங்களாக தண்ணீர் வீணாக வெளியேறி வந்தது. இதுகுறித்து நேற்று முன்தினம் தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக பேரூராட்சி நிர்வாகம் அய்யாபட்டி சாலை பகுதியில் சேதமான குடிநீர் குழாயை சீரமைத்து நடவடிக்கை எடுத்துள்ளது. தொடர்ந்து மற்ற பகுதிகளில் சேதமான குடிநீர் குழாய்கள் சீரமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Related Stories: