ஏடிஎம்., மெஷினில் கிடந்த ரூ.20 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்த வாலிபருக்கு டிஎஸ்பி., பாராட்டு

ஈரோடு, டிச. 12:  ஈரோட்டில் ஏடிஎம்., மெஷினில் கேட்பாரற்று கிடந்த ரூ.20 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்த வாலிபரை டிஎஸ்பி மற்றும் வங்கி மேலாளர்  பாராட்டினர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தோப்புபாளையத்தை சேர்ந்தவர் விவேக் (28). இவர் பெருந்துறை ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். விவேக் நேற்று காலை செங்கோடம்பள்ளம் அருகில் உள்ள ஏடிஎம்.,மில் பணம் எடுக்க சென்றார். அப்போது ஏடிஎம்., இயந்திரத்தில்   யாரோ ஒருவர் பணத்தை எடுக்காமல் அப்படியே விட்டு சென்றதை பார்த்துள்ளார். பணத்தை எண்ணி பார்த்த போது அதில் ரூ.20 ஆயிரம் இருந்தது.

இதுகுறித்து விவேக் ஈரோடு டவுன் டிஎஸ்பி., ராதாகிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி., பணத்தை பெற்று, வங்கி மேலாளருக்கு தகவல் தெரிவித்தார். வங்கி மேலாளர் பணத்தை உரியவரிடம் ஒப்படைக்கப்படும் என விவேக்கிடம் உறுதியளித்தனர். இதனையடுத்து, நேற்று மதியம் ஈரோடு டவுன் டிஎஸ்பி., அலுவலகத்திற்கு விவேக்கை அழைத்து டிஎஸ்பி., ராதாகிருஷ்ணன் மற்றும் வங்கி மேலாளர் அவரை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். இதுகுறித்து வங்கி மேலாளர் கூறியதாவது: விவேக் ஏடிஎம்.,மில் பணம் எடுக்க சென்றபோது, ரூ.20 ஆயிரம் வெளியே இருந்துள்ளது. இதைப்பார்த்து டிஎஸ்பிக்கும், எங்களுக்கும் தகவல் தெரிவித்தார். நாங்கள் ஏடிஎம்.,மில் பணம் எடுக்க முயன்றவர்களை சிசிடிவி கேமராள் மூலம் ஆய்வு செய்தோம். அப்போது ஈரோடு கணபதி நகரை சேர்ந்த கோவிந்தராஜ் என்ற முதியவர் பணம் எடுக்க டெபாசிட் மெஷினில் முயன்றார். ஆனால் பணம் வரவில்லை என நினைத்து அவர் சென்றது தெரியவந்தது. அவர் எங்களது வங்கியின் வாடிக்கையாளர் என்பதால், அவரது விவரங்கள் உடனடியாக எங்களுக்கு தெரியவந்தது. அவருக்கும் தகவல் தெரிவித்து விட்டோம். அவரிடம் பணம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: