ஸ்பின்கோ நஷ்டத்துக்கு காரணமான ஊழல்களை விசாரிக்க வேண்டும்

புதுச்சேரி, டிச. 12:  ஏஐடியூசி புதுவை பஞ்சாலை தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. ஏஐடியூசி சங்க அலுவலகத்தில் நடந்த இக்கூட்டத்துக்கு தலைவர் ரவி தலைமை தாங்கினார். செயலாளர் அபிஷேகம், பொருளாளர் தேசிகன், துணை தலைவர்கள் பூபதி, சுப்பையா, செயலாளர் இளங்கோ மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திருபுவனை கூட்டுறவு நூற்பாலை (ஸ்பின்கோ) நஷ்டத்துக்கு காரணமாக அமைந்த ஊழல்கள் குறித்து விசாரிக்க வேண்டும். கொள்ளை போன மில்லின் பணத்தை கையகப்படுத்தி மில் கணக்கில் கொண்டுவர வேண்டும். மில்லுக்கு தேவையான பஞ்சை அரசே நேரடியாக வாங்கி கொடுத்து மில்லை லாபத்தில் இயக்க வேண்டும். ஏஎப்டி, சுதேசி, பாரதி மில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 4 மாத சம்பளம், போனசை உடனடியாக வழங்க வேண்டும்.

ஏஎப்டிக்கு சொந்தமான பட்டானூர் இடத்தை உடனடியாக விற்க வேண்டும். அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவின்படி ரூ.500 கோடியை மத்திய அரசிடம் இருந்து மானியமாக விரைவில் பெற்றிட வேண்டும். அனைத்து மில்களிலும் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு 2013ல் இருந்து வழங்கப்படாமல் உள்ள கிராஜூவிட்டி மற்றும் அனைத்து நிலுவை தொகையையும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: