×

புதுவை பெட்டி கடைகளில் உணவு பாதுகாப்பு துறை ஆய்வு

புதுச்சேரி,  டிச. 12:  புதுவையில் காவல்துறையுடன் இணைந்து உணவு பாதுகாப்புத் துறையினர்  கடைகளில் அதிரடியாக ஆய்வுப் பணியில் இறங்கி இருப்பதால் சிறு வியாபாரிகள்  கலக்கமடைந்துள்ளனர். புதுவையில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை  பொருட்கள் விற்பனை அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தன.  இதையடுத்து கோரிமேடு இந்திரா நகரில் உள்ள உணவு பாதுகாப்புத் துறை  அலுவலகத்தில் கவர்னர் கிரண்பேடி ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க  உத்தரவிட்டார்.

 இதன் எதிரொலியாக கோரிமேடு ஜிப்மர் எதிரே நேற்று  முன்தினம் உணவு பாதுகாப்புத் துறையினர், போலீசாருடன் இணைந்து அங்குள்ள  கடைகளில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பாக்கமுடையான்பேட்டை  லட்சுமணன் (48) கடையில் குட்கா விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து  ரூ.2 ஆயிரம் மதிப்பிலான குட்கா போதை பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள்  எச்சரிக்கை விடுத்தனர். மேலும் இதுதொடர்பாக உணவு பாதுகாப்பு அதிகாரி  பாலகிருஷ்ணன் அளித்த புகாரின்மீது கோரிமேடு சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன்  தலைமையிலான போலீசார், லட்சுமணன் மீது வழக்குபதிந்து அவரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதேபோல் மற்ற சிறு கடைகளிலும் அதிரடியாக சோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த நடவடிக்கையால் வியாபாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.


Tags : Department of Food Safety Department ,Pueblo Box Stores ,
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...