×

ஊத்துக்கோட்டையில் 11.20 லட்சத்தில் உயர் கோபுர மின் விளக்குகள்

ஊத்துக்கோட்டை, டிச.12: ஊத்துக்கோட்டை  பேரூராட்சியில் 11.20 லட்சத்தில் 2 உயர்கோபுர மின் விளக்குகளை அமைச்சர் தொடங்கிவைத்தார்.  ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் வியாபாரிகள்,  அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள் என 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மேலும் ஊத்துக்கோட்டையைச் சுற்றியுள்ள சுமார் 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள், ஊத்துக்கோட்டை பஸ் நிலையத்திற்கு வந்து அங்கிருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ஆந்திரமாநிலமான திருப்பதி, புத்தூர், காளஹஸ்தி போன்ற பகுதிகளுக்கு வேலை, கல்லூரி, கோயில் ஸ்தலங்கள் ஆகிய இடங்களுக்கு சென்று வருகின்றனர். பஸ் நிலையத்தில் இரவு நேரத்தில் பயணிகள் இருளில் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய அவலநிலை உள்ளது. தாலுகா அலுவலகம் மற்றும் பேரூராட்சிக்கும் இடைப்பட்ட பகுதியும்  இருள்சூழ்ந்து காணப்பட்டது.

இந்நிலையில், ஊத்துக்கோட்டை பஸ் நிலையத்திலும், தாலுகா அலுவலகம் செல்லும் வழியிலும் உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பேரூராட்சிக்கு கோரிக்கை வைத்தனர்.  அதன்படி திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் வேணுகோபால், தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து  தலா 5.60  லட்சம் வீதம் 2 உயர்கோபுர மின்விளக்கு அமைக்க 11.20 லட்சம் நிதி ஒதுக்கினார். அந்த நிதியில்  புதியதாக 2 இடங்களில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது.  அதன்  தொடக்க விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கினார். முன்னதாக பேரூராட்சி செயல் எஸ்.ஜெயக்குமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர் பெஞ்சமின், எம்பி.வேணுகோபால், எம்எல்ஏக்கள் பலராமன், விஜயகுமார், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கனகராஜ்  ஆகியோர் 2 உயர்கோபுர மின் விளக்குகளை இயக்கிவைத்து சிறப்புரையாற்றினர்.

Tags : Idukki ,
× RELATED மூணாறு அருகே கள்ளச்சாராய ஊறல் அழிப்பு