×

மாநில அளவில் நடந்த ஓவிய போட்டியில் அதிக பதக்கம் பெற்று டி.ஜெ.எஸ்.பப்ளிக் சிபிஎஸ்சி பள்ளி சாதனை

கும்மிடிப்பூண்டி, டிச.12:  குளோபல் ஈவண்ட் மேனேஜர்ஸ் என்ற நிறுவனத்தினர் மாநிலம் தழுவிய ஓவியம் வரையும் போட்டியை நடத்தியது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டம் உள்பட தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.  இதில், பெருவாயல் டி.ஜெ.எஸ். பப்ளிக் சிபிஎஸ்சி பள்ளி மாணவர்கள் 35 பேர் பங்கேற்றனர்.அதில், எல்கேஜி மாணவர் விஷ்வா, யுகேஜி மாணவர் யஷ்வந்த், முதலாம் வகுப்பு மாணவர் ஆர்.டி.மிருதுளா, 2ம் வகுப்பு மாணவர் கே.ஹரிஹரன், 3ம் வகுப்பு மாணவர் முகதி, நான்காம் வகுப்பு மாணவர் ரிஷி, 5ம் வகுப்பு மாணவர் வி.அபிராமி, 6ம் வகுப்பு மாணவர் லீலா பிரசாத் ஆகியோர் முதலிடம் பிடித்து தங்க பதக்கம் வென்றனர்,  அதிக அளவு தங்க பதக்கம் வென்றதையடுத்து டி.ஜெ.எஸ் பப்ளிக் பள்ளிக்கு சிறந்த பள்ளி என்ற விருது வழங்கப்பட்டது.

சிறந்த பள்ளி விருது பெற காரணமாக இருந்த  மாணவர்களை பாராட்டி டி.ஜெ.எஸ் கல்விக்குழும தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் பரிசு வழங்கினார். தொடர்ந்து பள்ளிக்கு வழங்கிய விருதினை மாணவர்கள் டி.ஜெ.எஸ் கல்வி குழும தலைவரிடம் ஒப்படைத்தனர். பள்ளி தாளாளர் டி.ஜெ.தமிழரசன், முதல்வர் சுகாதா தாஸ், நிர்வாக அலுவலர் ஏழுமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : DJS Pipeline CBCC ,state level competition ,
× RELATED கருணை அடிப்படையில் பணி நியமனம்: அமைச்சர் வழங்கினார்