வாகனம் மோதி காவலர் பலி

திண்டிவனம், டிச. 12: திண்டிவனம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி காவலர் பரிதாபமாக இறந்தார். திண்டிவனம் அடுத்த பிரம்மதேசம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிபவர் பாலசுப்ரமணியன் (34). இவர் நேற்று முன்தினம் இரவு பிரம்மதேசத்தில் உள்ள அரசு மதுபானக்கடை விற்பனையாளர் வீட்டுக்கு பணத்துடன் வருவதற்கு பாதுகாப்பாக திண்டிவனம் வந்து விற்பனையாளரை விட்டு விட்டு மீண்டும் பிரம்மதேசம் காவல் நிலையம் நோக்கி தனது இரண்டு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.

ஆத்தூர் கூட்டுப் பாதை நோக்கி சென்று கொண்டிருக்கும்போது எதிரில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். அப்போது இரவு ரோந்துபணிக்காக அந்த வழியே வந்த பிரம்மதேசம் காவலர்கள் இரண்டு சக்கர வாகனம் மட்டும் கிடப்பதைப் பார்த்து கையில் இருந்த டார்ச் லைட்டை பயன்படுத்தி தேடும்போது அருகில் இருந்த பள்ளத்தில் பாலசுப்ரமணியன் தலையில் பலத்த காயமடைந்து விழுந்து கிடந்தார். அவரை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இறந்த பாலசுப்ரமணியத்திற்கு முருகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர் அனந்தபுரம் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 5 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இரவு நேரங்களில் பணியிலிருந்து வீடு திரும்பும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு வீடு வரை பாதுகாப்பிற்காக செல்லும் காவலர்கள் கொள்ளையர்களால் தாக்கப்படுவதும், விபத்தில் சிக்கி உயிரை விடுவது வாடிக்கையாக உள்ளது. எனவே இரவு நேரங்களில் டாஸ்மாக் கடை வசூலுக்கென்று ஒரு குறிப்பிட்ட கடைகளுக்கு விற்பனையான பணத்தை வசூலிப்பதற்காக துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் ஒரு டாஸ்மாக் அதிகாரியை நியமிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்

துள்ளனர்.

Related Stories: