விருத்தாசலம் அருகே அனுமதியின்றி மணல் கடத்திய 11 மாட்டு வண்டிகள் பறிமுதல்

விருத்தாசலம், டிச. 12: விருத்தாசலம் அருகே அனுமதியின்றி மணல் கடத்திய 11 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டனர்.விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமலிங்கம், காமராஜ் ஆகியோர் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தொட்டிக்குப்பம் மணிமுக்தாற்றில் இருந்து அனுமதியின்றி மணல் கடத்தி வந்த 9 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து மங்கலம்பேட்டை காவல்நிலையம் கொண்டு சென்றனர். தொடர்ந்து மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களான முகாசபரூரை சேர்ந்த அண்ணாமலை மகன் சிவா (35), பாவாடை மகன் வெங்கடேசன் (42), பெரியசாமி மகன் மணிகண்டன் (30), மு.பட்டியை சேர்ந்த ஆறுமுகம் மகன் அய்யப்பன் (42), ராஜேந்திரன் மகன் ராஜீவ்காந்தி (28), சுப்பிரமணியன் (55), கலியபெருமாள் மகன் அலெக்சாண்டர் (35), செல்வராசு மகன் தம்பிகண்ணன் (35), முத்தையா மகன் ஜெய்சங்கர் (27) ஆகிய 9 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருவேப்பிலங்குறிச்சி: கருவேப்பிலங்குறிச்சி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவனூர் வெள்ளாற்றில் இருந்து அனுமதியின்றி மணல் கடத்தி சென்ற 2 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து கருவேப்பிலங்குறிச்சி காவல்நிலையம் கொண்டு சென்றனர். தொடர்ந்து மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களான காவனூர் கிராமத்தை சேர்ந்த தனபால் மகன் கிருஷ்ணமூர்த்தி (35), கானூரை சேர்ந்த ஆனந்தன் (55) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களுக்கு அபராத தொகை விதிப்பதற்கு விருத்தாசலம் சார் ஆட்சியர் பிரசாந்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Related Stories: