×

நெய்யூர் வட்டார கிறிஸ்தவர் ஐக்கிய பேரவை கிறிஸ்துமஸ், நல உதவி வழங்கும் விழா

திங்கள்சந்தை, டிச. 12:   கிறிஸ்தவ ஐக்கிய பேரவையின் நெய்யூர் வட்டார கிறிஸ்துமஸ் விழா தாணிவிளை மெசியா மிஷன் திருச்சபையில் நடந்தது. ஆலன்கோடு இரட்சண்ய சேனை போதகர் திலிப்குமார் ஜெபம் செய்தார். தாணிவிளை மெசியாமிஷன் திருச்சபை போதகர் பென்னி ஜெபராஜ் பாடல்பாடி விழாவை நடத்தினார். நெய்யூர் வட்டார ஐக்கிய கிறிஸ்தவர் பேரவை செயலாளர் ஆசிரியர் தேவராஜ் வரவேற்றார். முரசங்கோடு கத்தோலிக்க திருச்சபை பங்கு தந்தையும், ஐக்கிய கிறிஸ்தவ பேரவை ெநய்யூர் வட்டார தலைவருமான அருட்பணி பெனிட்டோ தலைமை வகித்தார்.  நெய்யூர் வட்டார உதவி தலைவரும் சர்ச் ஆப் மெசியாமிஷன் திருச்சபையின் மெட்ரோ பொலிட்டன் மரியராஜ்  முன்னிலை வகித்தார். ெநய்யூர் வட்டார கிறிஸ்தவ ஐக்கிய பேரவையின் சட்ட ஆலோசகர் ரமேஷ், இளைஞர் அணி தலைவர் ரோப்சன் நவீன்தாஸ், மகளிர் அணி தலைவி மேரி லில்லி புஷ்பம், வட்டார பொருளாளர் ஜாண் அர்னால்டு, மாவட்ட உதவி தலைவர் போதகர் ஞானதாசன், பேரின்பபுரம் சிஎஸ்ஐ போதகர் சுவாமிதாசன், மாவட்ட மகளிர் அணி தலைவர் அருள் சகோதரி பொனிபேஸ் பியாத்தா, முன்னாள் காவல்துறை ஐஜி ஜாண் நிக்கல்சன், தக்கலை வட்டார தளபதி மேஜர் சுபாஷ், செயற்குழு உறுப்பினர் ஜெகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

 ஐக்கிய பேரவையின் மாவட்ட செயலாளர் ராஜ் சிறப்புரையாற்றினார். தக்கலை மறைமாவட்ட பேராயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் கிறிஸ்து பிறப்பு செய்தி அளித்தார்கள். கண்ணோடு கத்தோலிக்க திருச்சபை, ஆலங்கோடு இரட்சண்ய சேனை திருச்சபை மற்றும் தாணிவிளை மெசியாமிஷன் திருச்சபையினர் கிறிஸ்து பிறப்பு குறித்த கலை நிகழ்ச்சி நடத்தினர். பிஷப் மார்ஜார்ஜ் ராஜேந்திரன் மரக்கன்று நட்டார்.   தாணிவிளை மெசியா மிஷன் திருச்சபையில் 10, பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 4 பேருக்கு பரிசு தொகையும், பெண்களுக்கு தையல் இயந்திரமும், முதியோருக்கு கிறிஸ்துமஸ் அன்பளிப்பு தொகையும், புத்தாடைகளும் வழங்கப்பட்டது. போதகர் சசில்ராஜ் ஜெபித்தார். விழாவை மெசியாமிஷன் திருச்சபையின் வாலிபர்கள் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் இணைந்து ஒழுங்கு படுத்தினர்.

Tags : Neyyur Regional Christian ,United Nations ,Welfare Assistance Festival ,
× RELATED உலக புத்தக தினத்தையொட்டி பெரம்பலூர் நூலகத்தில் புத்தகம் வாசிப்பு