×

நெல்லையப்பர், அழகியகூத்தர் கோயில்களில் 14ல் திருவாதிரை திருவிழா கொடியேற்றம்

நெல்லை, டிச. 11: நெல்லையப்பர், அழகியகூத்தர் கோயில்களில் 14ம் தேதி திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வருகிற 23ம் தேதி ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் - காந்திமதியம்பாள் கோயிலில் மார்கழி மாத திருவாதிரை திருவிழா, வருகிற 14ம் தேதி காலை 8.30 மணிக்கு கொடியேற்றுத்துடன் தொடங்குகிறது. 17ம் தேதி இரவு 8 மணிக்கு சுவாமி- அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலா நடக்கிறது. சுவாமி சன்னதி 2ம் பிரகாத்தில் உள்ள பெரிய சபாபதி சன்னதி முன்பு 23ம் தேதி வரை அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரை திருவெம்பாவை வழிபாடு நடக்கிறது.22ம் தேதி தாமிர சபையில் இரவு நடராஜ பெருமானுக்கு திருநீராட்டு, சிறப்பு தீபாராதனை நடக்கிறது. 23ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு பசு தீபாராதனை, 4 மணி முதல் 5 மணி வரை நடராஜர் திருநடன காட்சியான ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. ஏற்பாடுகளை ேகாயில் செயல் அலுவலர் ரோஷினி மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.இதேபோல் ராஜவல்லிபுரம் அழகியகூத்தர் செப்பரை கோயிலில், 14ம் தேதி காலை 7 மணிக்கு திருவாதிரை திருநாள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 16ம் தேதி சுவாமி, அம்பாள் பூ, சிம்ம வாகனத்திலும், 4ம் திருவிழாவில் சுவாமி -அம்பாள் ரிஷப வாகனத்திலும் வீதியுலா நடக்கிறது.

7ம் நாள் காலை 10 மணிக்குமேல் அழகியகூத்தர் விழா மண்டபத்திற்கு எழுந்தருளலும், மாலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 7 மணிக்கு சிவப்பு சாத்தி தரிசனம், 8ம் நாளில் காலை 10 மணிக்கு வெள்ளை சாத்தியும்,  மாலை 5 மணிக்கு பச்சை சாத்தி தரிசனமும் நடக்கிறது. 9ம் நாளில் (22ம் தேதி) காலை 8 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், காலை 11.30 மணிக்கு தேரோட்டம், 10ம் நாளான 23ம் தேதி அதிகாலை 2 மணிக்கு மகா அபிஷேகம், காலை 5.30 மணிக்கு கோ பூஜை, ஆருத்ரா தரிசனம், மதியம் 2 மணிக்கு நடன தீபாராதனை, 3 மணிக்கு சுவாமி வீதியுலா, மாலை 5 மணிக்கு பஞ்சமுக அரச்சனை, இரவு 7.30 மணிக்கு பிற்கால அபிஷேகம், இரவு 9 மணிக்கு சுவாமி தாமிர சபைக்கு எழுந்தருளல் நடக்கிறது. 14ம் தேதி முதல் 19ம் தேதி வரை திருக்கோயில் ஓதுவார் ராஜவல்லிபுரம் வழிபாட்டு குழுவினரின் 1,000 முறை திருவெம்பாவை பாராயணம் செய்தலும் நடக்கிறது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் அய்யர் சிவமணி மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.



Tags : Thiruvathirai Festival ,Azhagyagutha 14 ,Nellaiyappar ,
× RELATED திருவாதிரை திருவிழா நெல்லையப்பர் கோயிலில் இன்று ஆருத்ரா தரிசனம்