×

சிலம்பம், டேக்வாண்டோ போட்டி கிங்ஸ் மெட்ரிக். பள்ளி சாதனை

நெல்ைல, டிச. 11: மண்டல சிலம்பம், டேக்வாண்டோ போட்டியில் கொண்டாநகரம் கிங்ஸ் மெட்ரிக். பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.நெல்லை கொண்டாநகரம் கிங்ஸ் மெட்ரிக்குலேஷன்  பள்ளி  மாணவர்கள், மண்டல அளவிலான சிலம்பம் மற்றும் டேக்வாண்டோ போட்டியில் பரிசுகள் வென்றுள்ளனர்.  டேக்வாண்டோ போட்டியில் 10ம் வகுப்பு மாணவர்கள் கவுசிகா 55- 59 கிலோ பிரிவிலும், ராஜகுரு 51 - 55 கிலோ பிரிவிலும், நந்த குமாரன் 48- 51 கிலோ பிரிவிலும் 3ம் இடம் பெற்றனர். 9ம் வகுப்பு மாணவன் செல்வமகேஷ் சிலம்ப போட்டியில் 25 கிேலா எடை பிரிவில் 3வது இடம் பெற்றார்.  பரிசு பெற்ற மாணவர்களை பயிற்சியாளர், தாளாளர்கள், தலைமை ஆசிரிய, ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பாராட்டினர்.

Tags : Chile ,kings ,
× RELATED பூத் சிலிப் மட்டும் இருந்தால் போதாது;...