சாத்தான்குளத்தில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு கூட்டம்

சாத்தான்குளம், டிச.11: சாத்தான்குளம் டிஎன்டிடிஏ ஆர்.எம்பி. புலமாடன் செட்டியார் தேசியமேல்நிலைப் பள்ளியில் பேரூராட்சி, கல்வி கழகம் மற்றும் நட்சத்திர அரிமா சங்கம் சார்பில் பிளாஸ்டிக்கை தவிர்க்கும் பொருட்டு  விழிப்புணர்வு கூட்டம் மற்றும் துணிப்பை வழங்கும் விழா நடந்தது. கூட்டத்துக்கு  கல்விக்கழகத் தலைவர்  சுப்பிரமணியம் தலைமை  வகித்தார். முன்னாள் பேரூராட்சித் தலைவர் ஜோசப், பள்ளி தாளாளர்கிருபாகரன், அரிமா சங்க  தலைவர் சுந்தர், தலைமையாசிரியர் எட்வர்ட் முன்னிலை வகித்தனர்.முன்னாள் மாணவ -மாணவியர் சங்கச் செயலாளர் ஜெயப்பிரகாஷ் வரவேற்றார்.  

   இதில் பேரூராட்சி  செயல் அலுவலர் நாகராஜன், நகர திமுக செயலாளர் இளங்கோ, வக்கீல் வேணுகோபால், வர்த்தக சங்கத் தலைவர் துரைராஜ், பள்ளி  பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்  லட்சுமி நாராயணன், அங்காள பரமேஸ்வரி கோயில் தர்மகர்த்தா முருகன், மூலிகை மருத்துவர் மதுரம்செல்வராஜ், ஒன்றிய அமமுக செயலாளர் ராஜ்மோகன்,  வட்டார மனித நேய நல்லிணக்க பெருமன்ற  செயலாளர் பால்துரை  ஆகியோர்  பேசினர்.பள்ளி மாணவ, மாணவிகள்  விழாவில் பங்கேற்றவர்களுக்கு  துணிப்பை வழங்கப்பட்டது. அனைத்து வீடுகளுக்கும் துணிப்பை வழங்க முடிவு செய்யப்பட்டது. பொதுமக்கள் பிளாஸ்டிக்பைகளை தவிரக்க வேண்டும்  என செயல் அலுவலர் நாகராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நிகழ்ச்சியில்   சுகாதார மேற்பார்வையாளர் ஜேக்கப், ஆசிரியர் ரெக்ஸ் ஓய்வு பெற்ற சாலை ஆய்வாளர் கேசவதாஸ், முன்னாள் அரிமா சங்க தலைவர் நந்தகுமார், தொழிலதிபர்கள் சிவராம கிருஷ்ணன்,முத்துக்குமார், ஒன்றிய திமுக பிரதிநிதி குருசாமி  உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.அரிமா சங்க செயலாளர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Related Stories: