×

எல்காட் இ மார்க்கெட் மூலம் அரசு அலுவலகங்களுக்கு மின்னணு சாதனங்கள் கொள்முதல் தமிழக அரசு உத்தரவு

வேலூர், டிச.11:அரசு அலுவலகங்களுக்கு இனி எல்காட் இ மார்க்கெட் மூலம் மின்னணு சாதனங்கள் கொள்முதல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழக அரசின் அனைத்து துறைகளின் அலுவலகங்களுக்கும் தேவையான ஸ்டேஷனரி பொருட்கள், பர்னீச்சர் பொருட்கள், கணினிசார்ந்த பொருட்கள் அதிகளவில் கொள்முதல் செய்யப்படுகின்றன. அரசு அலுவலகங்களுக்கு தேவைப்படும் பொருட்களை கொள்முதல் செய்வதற்கான அரசின் நடைமுறைகள் தனியாக வகுக்கப்பட்டுள்ளன. இதில் கணினி உட்பட மின்னணு சாதனங்களை தமிழ்நாடு மின்னணு கழகமான எல்காட் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும். இதற்காக துறைவாரியாக தனித்தனியாக கருத்துருக்கள் அனுப்புவதற்கும் வழிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனாலும் கணினி மற்றும் அது சார்ந்த சாதனங்களை வாங்குவதில் பெருமளவு குளறுபடிகள், முறைகேடுகள் நடப்பதாக புகார் எழுந்தது. இதனை தவிர்க்க அரசு நிறுவனங்களுக்கான பொருட்களை வாங்குவதில் வெளிப்படை தன்மையை கடைபிடிக்க ஆன்லைன் கொள்முதல் எனும் நடைமுறைக்கு அரசுத்துறைகளை மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

குறிப்பாக மின்னணு சாதனங்களை அரசுத்துறை அலுவலகங்கள் ெகாள்முதல் செய்வதற்கு எல்காட் நிறுவனம், இ-மார்க்கெட் என்ற ஆன்லைன் சேவையை தொடங்கியுள்ளது. ஆனாலும் பெரும்பாலான அரசுத்துறை நிறுவனங்கள் வழக்கமான முறையிலேயே பொருட்களை கொள்முதல் செய்வதாக தெரிய வந்துள்ளது.இந்நிலையில், தமிழக அரசு தலைமை செயலகத்தில் சமீபத்தில் நடந்த அனைத்துத்துறை செயலர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில், இ-மார்க்கெட் தளத்தில் அரசின் அனைத்துத்துறைகளும் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. பொருட்களை வாங்கும் அதிகாரி, அத்துறை சார்பில் இத்தளத்தில் பதிவு செய்து பொருட்களை வாங்க வேண்டும் என்று தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.இவ்வாறு அரசின் அனைத்துத்துறைகளும், என்னென்ன பொருட்களை கொள்முதல் செய்துள்ளன என்ற விவரம், நேரடியாக அரசின் கவனத்துக்கு சென்று விடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Tamilnadu ,government offices ,
× RELATED வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி: கலெக்டர் ஆய்வு