×

குண்டும், குழியுமான தத்தனூர் -குடிகாடு சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

ஜெயங்கொண்டம். டிச.11:  ஜெயங்கொண்டம் அருகில் உள்ள தத்தனூர் ஊராட்சியில் 7  குக்கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில்உள்ள கிராமங்களில் தத்தனூர் மட்டுமே பெரிய கிராமமாக உள்ளது. இதை சுற்றியுள்ள வளவெட்டிகுப்பம், குடிகாடு, வடகடல், பருக்கல், சோழங்குறிச்சி, காக்காபாளையம், சுத்தமல்லி ஆகிய கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வெளியூர் செல்ல வேண்டுமானாலும், அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமானாலும் தத்தனூர் வந்துதான் அனைத்து வெளியூர்களுக்கும் செல்ல வேண்டியுள்ளது.

இக்கிராமத்தின் வழியாக ஒரு மினி பஸ் மட்டுமே சென்று வருகிறது. சில கிராமமக்கள் இருசக்கர வாகனங்களில் வந்து சென்று வருகின்aறனர்.  
தற்பொழுது கடந்த சில மாதங்களாக பெய்து வரும் மழையினால் சாலைகள் மிக மோசமாகி குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற சைக்கிளில் செல்ல முடியாத அளவிற்கு ஜல்லிகள் பெயர்ந்தும் ஆங்காங்கு சேறும் சகதியுமாகி சாலையிலேயே குழியில் உள்ளன. இதனால் அவ்வழியே பள்ளிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் ,வாகனங்களில் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், வேளாண்மை விளைபொருட்களை லாரிகளில் இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் செல்வதற்கு விவசாயிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். போர்க்கால அடிப்படையில் இந்த சாலையை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி