×

கண் சிகிச்சை உதவியாளர் பணி சான்றிதழ் சரிபார்க்க இன்று கடைசி நாள்

பெரம்பலூர், டிச. 11: பெரம்பலூர் கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: சென்னை மருத்துவ பணியாளர் தேர்வு வாரிய தலைவரால் அறிவிக்கப்பட்ட 43 கண் சிகிச்சை உதவியாளர் (OphthalmicAssistant) பணி காலியிடங்களுக்கு மாநில அளவில் உத்தேச பதிவுமூப்பு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு கல்வித்தகுதி 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் கண் சிகிச்சை உதவியாளர் (OphthalmicAssistant) பணிக்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் - முன்னுரிமையற்றவர்கள் 2013 பிப்ரவரி 28ம் தேதி வரை பதிவு செய்தவர்களும், பொதுப்பிரிவினர், -பொது முன்னுரிமை உடையவர்கள் கடந்த நவம்பர் 12ம் தேதி வரை பதிவு செய்தவர்களும் பரிந்துரைக்கப்படவுள்ளனர்.
இந்த பணிக்கு தகுதியுள்ளவர்கள் தங்கள் வேலைவாய்ப்பு அடையாள அட்டை, சாதிச்சான்று, குடும்ப அடையாள அட்டை மற்றும் அனைத்து கல்வி சான்றுகளுடன் இன்றைக்குள் (11ம் தேதி) பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்புத்துறை அலுவலகத்துக்கு வந்து சான்றிதழ் சரிபார்த்து கொள்ளலாம்.

Tags :
× RELATED புதா.பழூர் அருகே அரசு அனுமதியின்றி மதுவிற்ற 2 பேர் கைது