×

இலவச கறவை மாடுகள் வழங்குவதில் குளறுபடி கால்நடை உதவி இயக்குனர் அலுவலகம் முற்றுகை

ஜெயங்கொண்டம், டிச.11: தமிழக அரசின் ஏழைகளுக்கு இலவச கறவை மாடுகள் வழங்குவதில் குளறுபடி நடப்பதாக பொதுமக்கள் கால்நடை உதவி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஜெயங்கொண்டம் அருகிலுள்ள தா.பழூர் ஒன்றியம் இடங்கன்னி மற்றும் அண்ணங்காரன்பேட்டை கிராமத்தை சேர்ந்த பொதுமக்களுக்கு தமிழக அரசின் இலவச கறவை மாடுகள் வழங்குவதற்காக ஏழை மக்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு அதிகாரிகள் கூட்டம் நடத்தி அவர்களுக்கு பெறவேண்டிய மாடுகளை வாங்குவதற்கு பெண்களிடம் மாடு பார்க்க கூறினர். அதன்படி பெண்கள் அப்பகுதியிலேயே அதிகாரிகள் கூறியதன்படி சிவப்பு கலராக 6 பல் உடையதாகவும் மாடு பார்த்து மாடுகளுக்கு முன்பணத்தொகை கொடுத்துள்ளனர். டிசம்பர் மாதம் 10ம் தேதிக்குள் மாட்டை பெற்றுக்கொள்கிறோம் என கூறி முன்பணம் கொடுத்துள்ளனர். தற்போது அதிகாரிகள் ஏழை பெண்களை இழுத்தடித்து ஆந்திரா மாடுகள் தான் வாங்க வேண்டும் என பெண்களிடம் கூறி தொகை கொடுப்பதற்கு தாமதப்படுத்தி வந்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திலும் தெரியப்படுத்தி உள்ளனர். ஆனால் இதற்கு அதிகாரிகள் உள்ளூர் மாடுகளை வாங்க அனுமதிக்கவில்லை. அவர்கள் கூறுவது போல ஆந்திர மாடுகளை வாங்கி வந்தால் ஒன்றன்பின் ஒன்றாக மாடு கன்று ஆகியவை தமிழ்நாட்டின் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப இல்லாமல் இறந்து விடுகின்றன. மாடுகள் வளர்ப்பதற்காக தானே வாங்குகின்றோம். விற்கவோ சாகடிப்பதற்கு வாங்குவதில்லை ஏன் அதிகாரிகள் ஆந்திரா மாடுகளை மட்டுமே வாங்க வேண்டும் என பிடிவாதம் செய்கின்றனர் என தெரியவில்லை. இதனால் எங்களுக்கு தான் நஷ்டம் ஏற்படுகிறது எங்களுக்கு பின்னால் கூட்டம் நடத்தியவர்களுக்கு வழங்கியுள்ளனர். எங்களுக்கு மாடுகள் வழங்க மறுப்பதன் காரணம் என்ன என ஜெயங்கொண்டம் அருகில் உள்ள சின்னவளையம் கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை நாடி ஏழைப் பெண்கள் கேட்டுள்ளனர். அதிகாரிகள் யாரும் இல்லாததால் காலையில் 9 மணிக்கு வந்த பெண்கள் அனைவரும் மாலை 5 மணி வரை காத்திருந்தனர். அதிகாரிகள் யாரும் வரவில்லை. தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது காத்திருங்கள் வருகிறோம் என தகவல் கூறியுள்ளனர்.

தற்போது ஏழைமக்கள் முன்பணம் கொடுத்த காலக்கெடு நேற்றுடன் முடிவடைகிறது. நேற்று மாட்டுக்கான முழு பணத்தை கொடுக்கவில்லை என்றால் அட்வான்ஸ் பணத்தை திருப்பி கொடுக்க இயலாது என மாட்டுக்காரர்கள் கூறிவருகின்றனர். அதிகாரிகளும் பணம் கொடுக்க மறுக்கின்றனர். ஒன்று மாடு வாங்கி தர வேண்டும் அல்லது மாடு எங்களுக்கு இல்லை என கூறி விடவும் எதுவுமே கூறாமல் இழுத்தடிப்பதால் எங்களுக்கு நேரம் பணம் அனைத்தும் விரயமாகிறது. இதனால் மேல் அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்த்து அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

மாலை 4மணிக்கு வந்த கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநர் ராஜ்யகொடி மற்றும் கால்நடை மருத்துவர்கள்  மற்றும் ,எஸ்ஐ தினேஷ்குமார்  ஆகியோர்  பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் நாளை காலை(இன்று) குழுவாக சென்று இடங்கன்னி, அன்னங்காரன்பேட்டையில் மாடுகளை தணிக்கை செய்து அரசு கூறியுள்ள அனைத்து விதியின்கீழ் தேர்வு செய்யப்பட்டு பின் அங்கீகரிக்கப்பட்ட கால்நடை விற்பனை சந்தையின் மூலம் டோக்கன் அடிக்கப்படும் இவ்வாறு கூறியதின்பேரில் இதனை ஒப்புக்கொண்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : Siege ,Animal Assistant Director ,Office ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...