×

ஆன்லைன் கட்டணம் வழங்காததை கண்டித்து விஏஓ சங்கத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்

பெரம்பலூர்,டிச.11: ஆன்லைன் கட்டணம் வழங்காததைக் கண்டித்து தமிழ்நாடு கிராம நிர்வாகஅலுவலர் சங்கத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இதில்  பெரம்பலூர் மாவட்டத்தில் 18பெண்கள் உள்பட 83பேர் பங்கேற்றனர்..தமிழ்நாடு கிராம நிர்வாகஅலுவலர்கள் சங்கத்தின்சார்பாக கிராம நிர்வாக அலு வலர்கள் செய்துவரும் கணினிவழிச் சான்றுகள் மற்றும் இணையதள பணிகளுக்கு செலவினத்தொகை மற்றும் வசதிகள் செய்து தரவேண்டும் உள்ளிட்ட 21அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறுகட்டப் போராட் டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இதன்படி முதல்கட்டமாக கடந்த 28ம்தேதிமுதல் தமிழ்நாடு கிராமநிர்வாக அலு வலர்கள் சங்கத்தினர் கிராமநிர்வாக அலுவலர் அலுவலகங்களில் ஆன்லைன்மூலம் சான்றிதழ்கள், பட்டாமாறுதல் உள்ளிட்ட 14சேவைகள் வழங்குவதை நிறுத்தியுள்ளனர். 2ம் கட்டமாக அனைத்து தாலுக்கா தலைநகரங்களில் தமிழ்நாடு கிராம நிர்வாகஅலு வலர் சங்கத்தினர் 5ம்தேதிமாலை 6மணிக்குத்தொடங்கி 6ம்தேதி காலை 6மணிவரை யென இரவுநேர தர்ணாப் போராட்டத்தை நடத்தினர். 3ம்கட்டமாக 7ம்தேதி பெரம்ப லூர்  கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இவைகளுக்கு தமிழகஅரசு செவிசாய்க்கவில்லை. இதனைத் தொடர்ந்து நேற்று (10ம் தேதி) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இதற்காக நேற்று பெரம்பலூர் மாவட்டஅளவில் தமிழ்நாடு கிராமநிர்வாக அலுவ லர்கள் சங்கத்திலுள்ள 18பெண்கள் உள்பட 83கிராம நிர்வாக அலுவலர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பெரம்பலூர் தாலுகாஅலுவலகம் முன்பு மாவட்டப்பொருளாளர் கார்த்திகேயன், ஆலத்தூர் தாலுக்காஅலுவலகம் முன்பு மாவட்டத்தலைவர் ராஜா, வேப்பந்தட்டை தாலுகா அலுவலகம்முன்பு மாவட்டச் செய லாளர் ரங்கராஜ், குன்னம் தாலுகா அலுவலகம்முன்பு மாவட்ட ஒருங்கிணைப்பா ளர் அகிலன் ஆகியோர்தலைமையில் ஒன்றுகூடி கோரிக்கைகளைவலியுறுத்தி கோஷங் களைஎழுப்பினர். இதனால் வருவாய்த்துறையால் மேற்கொள்ளப்படும் ஒட்டுமொத்தப் பணிகளும் பாதிக்கப்பட்டு, பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

Tags : VAO Association ,
× RELATED தங்களுக்கு பாதுகாப்பு வழங்கும்...