×

பேச்சுவார்த்தை தோல்வி இன்றும், நாளையும் பணி புறக்கணிப்பு போராட்டம்

அரியலூர்,டிச.11: அரியலூர் மாவட்டத்தில் வருவாய் அலுவலரை தாக்கியதாகவும், தலைமையிடத்து துணை தாசில்தாரை அச்சுறுத்தும் விதமாக பேசியதாகவும் கூறி 3கிராம நிர்வாக அலுவலர்களை மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன் உத்தரவிட்டார். இச்சம்பவம் குறித்து கலெக்டர்  அலுவலக வளாகத்தில்  டி.ஆர்.ஓ தனசேகரன் தலைமையில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க மாநில நிர்வாகிகள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது.இந்த பேச்சு வார்த்தையில் கிராம நிர்வாக முன்னேற்ற சங்கத்தினர் பிரச்சனையில் சம்பந்தப்பட்ட  இருதரப்பினர் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

3கிராம நிர்வாக அலுவலர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையினை வாபஸ் பெறவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.இதற்கு டி.ஆர்.ஓ தனசேகரன் மறுப்பு தெரிவிக்க பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தினர் தங்களது கோரிக்கைகளை ஏற்காததால் நாளை( இன்று) மற்றும் 12ம் தேதி அரியலூர் மாவட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தினர் இரு தினங்கள் பணி புறக்கணிப்பு போராட்டமும், அதன் பிறகு தங்களது கோரிக்கைகளை ஏற்காவிட்டால் மண்டல அளவிலான உண்ணாவிரத போராட்டமும் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.

Tags : Negotiation ,
× RELATED 5ம் கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை...