×

பெரம்பலூரில் குற்றங்களை தடுக்க தனிக்குழு அமைப்பு

பெரம்பலூர்,டிச.11:  பெரம்பலூரில் குற்றங்களைத் தடுக்க கிரைம் டீம் அமைக்கப் பட்டுள்ளது. இரவு ரோந்துப் பணியில் நானே ஈடுபட்டு வருகிறேன். என பெரம்பலூர் எஸ்பி திஷாமித்தல் கூறினார்.பெரம்பலூர்  எஸ்பி திஷாமித்தல் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:பெரம்பலூர் மாவட்டத்தில் நகர்ப் புறங்க ள் மற்றும் கிராமப்புறங்களில் நடந்து வரும் கொள்ளை, வழிப்பறி, வன்முறை யில் ஈடுபட்டு அப்பாவிப் பொதுமக்க ளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல் போன்ற குற்ற சம்பவங்களில், சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோரை உடனுக்குடன் கண்டறிந்து, கைதுசெய்து, அவர்கள்மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க கிரைம் டீம் அமைக்கப் பட்டுள்ளது. அதோடு நெடுஞ்சாலை ரோந்து ப்படை போலீசார், போக்குவரத்து போலீ சார், தனிப்படை போலீசார் இரவு ரோந்துப்பணிகளில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

அதோடு ஆளில்லா வீடுகளில் நடக்கும் கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவதால், டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்களைப்போல் நானும் நள்ளிரவு வரை இரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகிறேன். வர்த்தகப் பிரமு கர்கள் தங்கள் கடைகளில், நிறுவ னங்களில் கண்காணிப்புக் கேமராக்க ளைப் பொறுத்த வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் காவல்துறையில் பணிபுரி வோர் பணிச்சுமை காரணமாக மன அழுத்தம் இன்றிப் பணிபுரிய ஏதுவா கத்தான் அவர்களுக்கு வாரந்தோறும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3நாட்க ளுக்கு காவலர் நிறைவாழ்வுப் பயிற்சி தண்ணீர் பந்தல் ஆயுதப்படை வளா கத்தில் அளிக்கப் பட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.

Tags : group ,individuals ,crimes ,Perambalur ,
× RELATED திருத்தப்பட்ட ஆண்டு திட்ட அட்டவணையை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி.