×

கஜா புயலில் பாதித்தோருக்குநிவாரணம் வழங்க கணக்கெடுக்காத அரசை கண்டித்து போராட்டம்

மயிலாடுதுறை, டிச.11: மயிலாடுதுறையில் நேற்று முன்தினம் இரவு விவசாய சங்கங்களின் கூட்டுக் கூட்டம் நடைபெற்றது. டெல்டா விவசாய சங்க செயலாளர் குருகோபிகணேசன் தலைமை வகித்தார். சேகர், ஜெகமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விவசாயிகள் பேசும்பொழுது, கடந்த மாதம் 15ம் தேதி இரவு துவங்கி விடிய விடிய வீசிய கஜா புயல் காரணமாக, நாகை மாவட்டம் முற்றிலும் சேதமடைந்தது. இதில் கடற்கரையோர பகுதிகள் பலத்த சேதத்தை சந்தித்தது.  இந்நிலையில் புயல் பாதித்த வேதாரண்யம், நாகப்பட்டினம் பகுதிகளில் கணக்கெடுப்பு நடைபெறும் நிலையில், மயிலாடுதுறை கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் எவ்வித கணக்கெடுப்பு பணிகளும் நடைபெறவில்லை. அதிகாரிகள், அமைச்சர்கள் யாரும் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடமால் புறக்கணித்துள்ளனர்.

இதனை கண்டித்து, காவிரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்கம் சார்பில், விவசாயிகள் சங்க கூட்டுக் கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது. முன்னோடி விவசாயிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில், விவசாயிகளுக்கு விவசாய கடன், கல்விக்கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும். புயலால் முழுமையாக கணக்கெடுப்பு நடத்தி இழப்பீடு வழங்க வேண்டும். இல்லை என்றால், அடுத்த வாரம் தமிழக அரசை கண்டித்து, மாபெரும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags : government ,storm ,victims ,Ghazi ,
× RELATED மிக்ஜாம் புயல் வெள்ளத்தால்...