×

கிராம நிர்வாக அலுவலர்கள் வேலைநிறுத்த போராட்டம் சான்றிதழ் பெற முடியாமல் பொதுமக்கள் கடும் அவதி

நாகை. டிச.11: பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி கிராம நிர்வாக அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பல்வேறு சான்றிதழ்கள் பெற முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். நாகை மாவட்ட தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம்  மற்றும் கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கம் இணைந்து  பழைய ஓய்வு திட்டத்தினை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். உட்பிரிவு பட்டா மாறுதலில் கிராம கிர்வாக அலுவலர் பரிந்துரையை கட்டாயமாக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்  கல்வி தகுதியை படிப்படியாக உயர்த்த வேண்டும். கூடுதல் பொறுப்பு கிராமங்களுக்கு  பொறுப்பு ஊதியம் மீண்டும் வழங்க வேண்டும். ஒரே உத்தரவில் மாவட்ட மாறுதல் உடன் வழங்கிட வேண்டும்.  

கணினி மற்றும் இணைய தள வசதிகள் செய்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்  கிராம நிர்வாக அலுவலர் நேற்று முதல் தொடங்கினர். நாகை மாவட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒட்டு மொத்தமாக   387 கிராம நிர்வாக அலுவலர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.  நாகை மாவட்டம் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ளதால், புயல் பாதிப்பு கணக்கெடுக்கும் பணியில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஈடுப்பட்டு வந்தனர். தற்போது  நிவாரண பொருட்கள் வாழங்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், கணக்குகளை வைத்துள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் வேலை நிறுத்தத்தில் உள்ளதால் தற்போது நிவாரண பொருட்கள் வழங்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும்  பொதுமக்கள்  தேவையான சான்றிதழ் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

Tags : Village administration officials ,
× RELATED கிராம நிர்வாக அலுவலர்கள் 2வது நாளாக போராட்டம்