×

பால்பண்ணைச்சேரி பகுதியில் நடைபாதை அமைத்து தர வேண்டும்

நாகை,டிச.11: பால்பண்ணைச்சரேி பகுதியில் நடைபாதை அமைத்து தர வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர். நாகை நகராட்சி தெற்கு பால் பண்ணைச்சேரி மாரியம்மன் கோயில் பின்புறத்தை சேர்ந்த கிராமமக்கள் நாகை கலெக்டர் அலுவலகத்தில் வழங்கிய கோரிக்கை மனுவில், தெற்கு பால்பண்ணைச்சேரி மாரியம்மன் கோயில் பின்புறத்தில் 45 வருடமாக குடியிருந்து வருகிறோம்.  தற்போது இந்த தெருவில 15 குடும்பம் உள்ளது.  நாகை நகராட்சி பகுதியில் உள்ள எங்களுக்கு இதுவரை அங்கீகரித்த பாதை கிடையாது.

தற்போது நாகை ஆண்டோ சிட்டியின்  வாயிலாக அரசு அங்கீகரித்த நடைபாதை கிடைத்தும் அந்த நடைபாதையில் எங்களால் நடக்க முடியவில்லை.
காரணம் ஆண்டோசிட்டி  வசிப்பவர்கள் அந்த நடைபாதையின் வாயிலாக செல்லும் பொழுது  நாங்கள் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்த்வர்கள் என்றும், எளிமையான வாழ்க்கை முறையில் வாழ்ந்து வருகிறோம் என்றும் அவதூராக பேசுவதுடன் சில அரசியல் முக்கிய பிரமுகர்களை கொண்டு தொந்தரவு செய்கிறார்கள். எங்கள் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். எங்கள் வாழ்வாதாரங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுகின்றன. எனவே எங்களுக்கு நடைபாதை அமைத்து தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : area ,Palapillaicheri ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...