×

வேதாரண்யத்திம் பகுதியில் 105 வருவாய் கிராமங்களுக்கு நிவாரண தொகை வங்கி கணக்கில் ெசலுத்தப்பட்டது

வேதாரண்யம்,டிச.11: வேதாரண்யத்தில் 105 வருவாய் கிராமங்காரைக்கால் காமராஜர் சாலையில்நகராட்சியின் புதிய பேருந்து நிறுத்தம் திறப்புகாரைக்கால், டிச.11: காரைக்கால் காமராஜர் சாலையில் தெற்குத்தொகுதி எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட  நகராட்சியின் புதிய பேருந்து நிறுத்தத்தின் திறப்பு விழா நடைபெற்றது.காரைக்கால் காமராஜர் சாலை மற்றும் கடற்கரை சாலை சந்திப்பில், ஏராளமான பொதுமக்கள் நின்று பேருந்து ஏறி வந்தனர். மழை, வெயிலில் ஒதுங்ககூட இடம் இன்றி பொதுமக்கள் தவித்து வந்தனர். தொடர்ந்து, பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து, தெற்குத்தொகுதி எம்எல்ஏ அசனா தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.7 லட்சம் செலவில், நகராட்சியின் புதிய பேருந்து நிறுத்தம் அப்பகுதியில் கட்டப்பட்டது.

இந்த பேருந்து நிறுத்தத்தின் திறப்பு விழா  நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, காரைக்கால் தெற்கு தொகுதி எம்எல்ஏ அசனா தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் சுபாஷ் முன்னிலை வகித்தார். தொடர்ந்து. எம்எல்ஏ அசனா  பேருந்து நிறுத்தத்தை ரிப்பன்வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், நகராட்சி செயற்பொறியாளர் மோகன்தாஸ், இளநிலைப்பொறியாளர் ராவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். காடந்தெத்தி கிராமத்தில் நிவாரண பொருட்கள்
வேதாரண்யம்,டிச.11: புயாலால் பாதிக்கப்பட்ட காடந்தெத்தி கிராமத்தில் நிவாரண பொருட்களை கலெக்டர் சுரேஷ்குமார் வழங்கினார்.
வேதாரண்யம் தாலுகா காடந்தெத்தி கிராமத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு அரசு அறிவித்த 27 பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

வேதாரண்யத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக சேமிப்பு கிடங்குகளில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டுள்ள நிவாரண பொருட்கள் மற்றும் தார்பாலின்களை கலெக்டர் சுரேஷ்குமார், பார்வையிட்டார். நிவாரண பொருட்கள் மற்றும் தார்பாலின்களை அந்தந்த கிராமங்களுக்கு பாதுகாப்பாக கொண்டு சென்று, பொதுமக்களுக்கு வழங்கிட விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்குஅறிவுறுத்தினார்.
பின்பு தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் காடந்தேத்தி ஊராட்சி, கிராம சேவைமைய கட்டிடத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு அறிவித்த 27 பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்களை கலெக்டர் சுரேஷ்குமார், வழங்கினார். தாசில்தார் இளங்கோவன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

Tags : revenue villages ,area ,Vedaranyatyam ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...