×

மீனவர்கள் மனு கடலோர கடைமடை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

கொள்ளிடம்,டிச.11: கொள்ளிடம் அருகே கடலோர கடை மடை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள பழையபாளையம், பன்னீர்கோட்டகம், அகரவட்டாரம், புளியந்துறை, புதுப்பட்டினம், வேட்டங்குடி, வருசபத்து, திருமுல்லைவாசல் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கடலோர கிராமங்கள், மிகவும் கடைமடை பகுதியாகவும், பின்தங்கிய பகுதியாகவும், இருந்து வருகிறது. இப்பகுதியில் உள்ள பாசன கிளை வாய்க்கால்களை கடந்த பல வருடங்களாக வெட்டி ஆழ்படுத்தாமலும் தூர்வாரப்படாமலும் உள்ளதால் மேட்டுரிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் பாசனத்திற்கு போதிய அளவில் சென்று சேரவில்லை. இதனால் விவசாயிகள் முழுமையான பயிர் சாகுபடி செய்ய முடியவில்லை. 40 சதவீத பயிர் சாகுபடி மட்டுமே செய்துள்ளனர். தண்ணீர் பற்றாக்குறையால் பயிர் வளர்ச்சி குன்றி காணப்படுகிறது. மேலும் பூச்சித்தாகுதலும் ஏற்பட்டுள்ளது. இதனால் பயிர் பெரிதும் சேதமடைந்துள்ளது.

இதே போல கொள்ளிடம் ஆற்றின் கரையை ஒட்டியுள்ள பல கிராமங்களில் தோட்டப்பயிர் சாகுபடியும் செய்யமுடியாமல் போய்விட்டது. இதனால் விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டு வறுமையில் வாடிக்கொண்டிருகின்றனர். எனவே விவசாயிகள் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்வதுடன் வேலை இழந்து வாடும் விவசாய தொழிலாளார்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கொள்ளிடம் வட்டார கிழக்கு பகுதி விவச்சாயிகள் சங்க தலைவர் ராஜதுரை தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளதாக தெரிவித்தார். களுக்கு நிவாரண தொகை வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.

வேதாரண்யத்தில் கஜா புயலினால் ஆயிரக்கணக்கான வீடுகளும் பல்லாயிரக்கணக்கான தென்னை மரங்களும் சாய்ந்தன. பலத்த சேதமடைந்த வேதாரண்யம் பகுதியில் தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்துள்ளது. புயலில் சாய்ந்த தென்னை மரங்களை வெட்டி புதிதாக தென்னங் கன்றுகளை நடுவதற்கு அரசு ஏற்பாடு செய்து வருகின்றது. இந்நிலையில் தென்னந்தோப்பில் ஏராளமான தென்னை மட்டைகள் விழுந்து வீணாகி கொண்டிருக்கிறது. இவற்றை பார்வையிட்ட அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நிருபர்களிடம் கூறியதாவது: வேதாரண்யம் பகுதியில் புயலால் பாதித்த கூரை வீடுகளுக்கு வெளி மாவட்டங்களிலிருந்து சுமார் 6 லட்சம் தென்னங் கீற்றுகள் அரசு மூலம் வாங்கப்பட்டு பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. சுமார் 36 ஆயிரம் குடிசை வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதால் இவற்றை சரிசெய்ய வெளிமாவட்டங்களிலிருந்து கீற்றை கொண்டு வருவதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. எனவே நூறு நாள் வேலைவாய்ப்பில் தென்னங் கீற்றுகளை முடைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறு முடைந்த கீற்றுகளை நூறு கீற்றுகள் ரூ.800க்கு அதிமுக சார்பில் விலைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.  கஜா புயல் பாதித்த கோடியக்கரைக்கு நூறு சதவீதம் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மற்ற 35 ஊராட்சிகளுக்கு படிப்படியாக மின்சாரம் வழங்கப்படும். 35 ஊராட்சிகளிலும் மின் விநியோகத்தை சீர்செய்ய மூன்று அதிகாரிகள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. குறைகள் இருந்தால் அவர்களை அணுகி விரைந்து மின்சாரம் கிடைக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். புயல் பாதித்த 181 வருவாய் கிராமங்களில் 105 வருவாய் கிராமங்களுக்கு வங்கி கணக்கில் ரூ.10,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. மீதி உள்ள வருவாய் கிராமங்களுக்கு விரைவில் வரவுவைக்கப்படும். இந்த தொகை வரவு வைக்கப்பட்ட உடன் முகாமில் தங்கி இருந்தவர்களுக்கு வாழ்வாதார தொகையாக ரூ.5000 உடனடியாக வரவு வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
× RELATED பொறையாரில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தேர்தல் விழிப்புணர்வு முகாம்