×

கரூரில் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 337 மனு மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு

கரூர், டிச. 11: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை வகித்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து முதியோர் உதவித்தொகை, வீட்டு மனைப்பட்டா, வேலை வாய்ப்பு, குடும்ப அட்டை உட்பட பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக 337 மனுக்கள் வந்தது. இதனை பெற்றுக் கொண்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். இந்த முகாமில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் மார்னிங் ஸ்டார் பள்ளியின் சார்பாக ரூ. 10,500, நடையனூர் நம்மாழ்வார் தென்னை உற்பத்தியாளர்கள் நிர்வாகம் சார்பாக ரூ. 25 ஆயிரம், ஒய்வு பெற்ற போஸ்ட் மாஸ்டர் ஒருவர் வழங்கிய ரூ.5 ஆயிரம்  ஆகிய தொகைகளை கலெக்டர் பெற்றுக் கொண்டார்.

மேலும் தாட்கோ மூலம் 20 சுகாதார பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு தொழில் தொடங்க தலா ரூ.3 லட்சத்திற்கான கடனையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ், நேர்முக உதவியாளர் செல்வசுரபி, தனித்துணை ஆட்சியர் மீனாட்சி உட்பட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


Tags : Collector ,petitions ,Karur ,
× RELATED மக்கள் குறைதீர் கூட்டத்தில் 415 மனுக்கள்: கலெக்டர் பெற்றுக்கொண்டார்