×

கரூர் ராயனூர் அருகே கழிப்பிடம் பராமரிக்க பொதுமக்கள்

கோரிக்கைகரூர், டிச.11: கழிப்பிடத்தை பராமரிக்க பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர் கரூர் ராயனூர் அருகே தொகுதி மேம்பாட்டு நிதியில் பொது சுகாதார கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது.  சரியான பராமரிப்பு இல்லை. இதனால் கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது, எனினும் பராமரிப்பு பணிகளை செய்யாமல் கழிப்பிடத்தை மூடி விட்டனர். ஆண்டுக்கணக்கில் இவ்வாறு கழிப்பிடம் இருந்தும் இல்லாத நிலைமை இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் உள்ளனர். உடனே கழிப்பிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Karur Raayanur ,
× RELATED கரூர் ராயனூர் 4 ரோடு சந்திப்பில் நிழற்குடை அமைக்கப்படுமா?