×

கொடிநாள் நிகழ்ச்சியில் மாஜி படைவீரர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

கரூர்,டிச.11:  கொடிநாள் நிகழ்ச்சியில் முன்னாள் படைவீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் உபசரித்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கலெக்டர் அன்பழகன் நலத்திட்ட உதவிகளை வழங்கி குறைகளை கேட்டறிந்தார். ரூ1.16லட்சம் மதிப்பிலான காசோலைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் கூறுகையில், படைவீரர் நல நிதிக்கு அனைத்து தரப்புமக்களும் தாராளமாக நிதியளிக்க முன்வரவேண்டும். எனது தந்தையும் தாய்நாட்டிற்காக பணியாற்றிய முன்னாள் ராணுவ வீரர்தான். கலெக்டர் என்பதைவிட ராணுவவீரரின் மகன் என்பதையே பெருமையாக கருதுகிறேன். பஞ்சாப் மாநிலத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் உள்ளவர்கள் அதிகமாக இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகின்றனர். முன்னாள் ராணுவத்தினர் வேலைவாய்ப்புக்காக துப்பாக்கி உரிமம் கேட்டு விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் கரூர் மாவட்டத்தில் உடனுக்குடன் பரிசீலனை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

முன்னதாக கலெக்டர் அலுவலகத்திலும் கரூர்ஜவகர்கடைவீதி பகுதியிலும் கொடிநாள் நிதி சேகரிப்பை கலெக்டர் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் அலுவலர்கள் செல்வசுரபி, தமிழ்ச்செல்வி, வேளாண் இணை இயக்குனர் ஜெயந்தி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் பரிமளாதேவி, முன்னாள்படைவீரர் நல அலுவலக நல அமைப்பாளர் வீரபத்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags : soldiers ,
× RELATED தேர்தல் பணிக்கு வந்த துணை ராணுவ படையினருக்கு திருத்தணி போலீசார் விருந்து