×

பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி

ரிஷிவந்தியம், டிச. 11: ரிஷிவந்தியம் அடுத்த மையனூரில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி நடந்தது. ரிஷிவந்தியம் வட்டார வளர்ச்சி அலுவலர்
சொக்கநாதன் தலைமையேற்று பேரணியை தொடங்கி வைத்தார். குழந்தையேசு பள்ளி தலைமை ஆசிரியர் சகாயராஜ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் ஆனந்த் வரவேற்றார். இதில் பள்ளி மாணவர்கள், மகளிர் சுய உதவி குழுக்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டு பிளாஸ்டிக் விழிப்புணர்வு குறித்தும், நோய் வராமல் தடுக்க வேண்டிய முன்னேற்
பாடுகள் குறித்தும் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தும், கோஷங்கள் எழுப்பியும் மையனூர் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்றனர். திருவெண்ணெய்நல்லூர்:  திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி சார்பில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. செயல்அலுவலர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். இதில் அரசு தடைசெய்துள்ள பிளாஸ்டிக் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் தீமைகள், அதை பயன்படுத்தாமல் இருப்பதற்கான வழிமுறைகளை பேரூராட்சி அலுவலர்கள் விளக்கி கூறினர். இதில் இளநிலை உதவியாளர் பாலமுருகன், ரவி, துப்புரவு மேற்பார்வையாளர் தனஞ்செழியன், சரவணன், குமார், செந்தில்  உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை