×

நீர்நிலைகளில் மூழ்கி குழந்தைகள் உயிரிழப்பதை தடுக்க தண்டோரா மூலம் விழிப்புணர்வு

கள்ளக்குறிச்சி, டிச. 11: திண்டிவனம் பகுதியில் கடந்த வாரம் 4 சிறுவர்கள் நீர்நிலை பகுதியில் விளையாடியபோது தண்ணீரில் மூழ்கி   உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன் அதிகாரிகளை அழைத்து ஆய்வுக்கூட்டம் நடத்தி அறிவுரை வழங்கினார்.
அதனையடுத்து கள்ளக்குறிச்சி சார் ஆட்சியர் (பொ) ராஜேந்திரன் வட்டாட்சியர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளார். அதில்
கூறியுள்ளதாவது, வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையின் காரணமாக கள்ளக்குறிச்சி கோட்டத்திற்கு உட்பட்ட கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம் ஆகிய வட்டங்களில் உள்ள ஆறுகள், ஏரிகள், குளம், குட்டை ஆகிய பகுதியில் நீர் நிறைந்து வருகிறது.

 இந்நிலையில் கிராமத்தில் உள்ள சிறுவர்கள், சிறுமிகள், பள்ளி மாணவ, மாணவிகள் மேற்படி ஏரி, குளம், குட்டை, ஆறு போன்ற நீர்நிலைகளில் குளிக்க செல்லும் போதோ, விளையாடும் போதோ தவறி விழுந்து இறந்துவிடும் சூழ்நிலை உருவாகிறது. எனவே இதுபோன்ற துயர சம்பவங்கள் நிகழாவண்ணம் வட்டாட்சியர்கள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள கிராமங்களில் தண்டோரா மற்றும் துண்டு பிரசுரம் மூலம் சிறுவர்கள், ஏரி, குளம், குட்டைகளில் விளையாடுவதற்கோ, குளிப்பதற்கோ பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டாமென்றும், நீர்நிலைகள் அருகில் செல்லாமல் கண்காணித்
திடவும், பொதுமக்களுக்கு அறிவுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என சார் ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.  
    
மேலும் வருவாய் வட்டாட்சியர்கள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள கிராமங்களில் பணியாற்றி வரும் கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று கிராமங்களில் தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி விழிப்புணர்வு
ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சார் ஆட்சியர் (பொ) ராஜேந்திரன் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம் ஆகிய மூன்று வட்டாட்சியர்களுக்கு சுற்றறிக்கை மூலம் தகவல் அனுப்பி உள்ளார்.

Tags : children ,Dandora ,water bodies ,
× RELATED 1.25 கோடி குழந்தைகள் உடல் பருமனால்...