சாலையை சீரமைக்க கோரி நாற்று நடும் போராட்டம்

பாகூர், டிச. 11: சோரியாங்குப்பம் மேட்டு தெரு - சாவடி சாலையை சீரமைக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாற்று நடும் போராட்டம் நடந்தது. கிளை செயலாளர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். இடைகமிட்டி முத்துலிங்கம், கிளை செயலாளர் குணசெல்வி முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தில் மாநில குழு உறுப்பினர் பெருமாள், கொம்யூன் செயலாளர் தமிழ்ச்செல்வம் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். இதில், குண்டும் குழியுமாக உள்ள மேட்டு தெரு சாலையை சரி செய்ய வேண்டும். அங்குள்ள நான்கு முனை சந்திப்பில் வேகத்தடை அமைக்க வேண்டும். பெரியார் நகர் - சோரியாங்குப்பம் வரை சாலையை புதுப்பிக்க வேண்டும். சுடுகாடு சாலையில் உள்ள பாலத்தை சரி செய்ய வேண்டும். ஆற்றங்கரை வாய்க்காலை துார்வார வேண்டும் என வலியுறுத்தினர். தொடர்ந்து, மேட்டுத்தெருவில் சேறும் சகதியுமான சாலையில், நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: