×

பயணிகளுக்கு ஜிஆர்பி உதவி ஆப் ரயில்வே போலீசார் விளக்கம்

சிதம்பரம், டிச. 11: ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால் அவசர உதவிக்கு ஜிஆர்பி உதவி ஆப் என்ற புதிய ஆப் ரயில்வே போலீஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆன்ட்ராய்டு மொபைல் மூலம் ஜிஆர்பி உதவி ஆப் பதிவிறக்கம் செய்து வைத்து கொள்ளலாம். ரயில்களில் நடக்கும் குற்றச்சம்பவங்கள் மற்றும் அவசர உதவிக்கான தகவலை ஜிஆர்பி உதவி ஆப் மூலம் அனுப்பினால் உடனடியாக அருகில் உள்ள ரயில்வே போலீசார் சம்பந்தபட்ட ரயிலுக்கு வந்து பிரச்னைக்கு தீர்வு காணுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே போலீஸ் கூடுதல் தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு, திருச்சி ரயில்வே எஸ்பி சரோஜ் குமார் தாக்கூர் ஆகியோர் உத்தரவின் பேரில் சிதம்பரம் ரயில் நிலையத்தில் நேற்று ரயில் பயணி களுக்கு ஜிஆர்பி உதவி ஆப் குறித்து துண்டறிக்கை வழங்கி போலீசார்  விளக்கம் அளித்தனர்.

சிதம்பரம் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜா, சப்-இன்ஸ்பெக்டர் ஜானகிராமன், தனிப்பிரிவு ஏட்டு பாஸ்கரன், தலைமை காவலர் சாந்தி மற்றும் போலீசார் ரயில் பயணிகளுக்கு துண்டு பிரசுரம் வழங்கி ஜிஆர்பி உதவி ஆப் குறித்து விளக்கம் அளித்தனர்.

Tags : CRP ,passengers ,Assistant App Railway ,
× RELATED அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி: 25க்கும் மேற்பட்டோர் காயம்!!