நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 4 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ₹40 லட்சம் நிதியுதவி

சேலம், டிச.11: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்டமாக நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நேற்று, புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ₹4.56 லட்சம் மதிப்பிலான பொருட்களை, கலெக்டர் ரோகிணி நேற்று அனுப்பி வைத்தார். இதுவரை ₹2.81 கோடி மதிப்பிலான பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், சேலம் மாவட்டத்தில் இருந்து ₹27.71 லட்சம்  முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, கஜா புயலின் போது திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அடுத்த வில்பட்டி சின்னபாலம் என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த இடர்பாடுகளில் சிக்கி, சேலம் மாவட்டத்தைச் சார்ந்த 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அவர்களுக்கு தலா ₹10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டது. இதற்கான காசோலையை, அவர்களின் குடும்பத்தாரிடம் கலெக்டர் ரோகிணி வழங்கினார்.

Related Stories: