விநாயகா மிஷன் ஹெல்த் சயின்ஸ் துறைக்கு சிறந்த ேவலைவாய்ப்பு நிறுவனத்திற்கான விருது

சேலம், டிச.11: விநாயகா மிஷனின் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு சிறந்த பயிற்சி மற்றும் ேவலைவாய்ப்பு நிறுவனம் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.ஆசிய மற்றும் மத்திய கிழக்கின் பிரதான தொழில்நுட்பம் மற்றும் ஊடக ஆராய்ச்சி நிறுவனமான எலெட்ஸ் டெக்னோமெடியா, 2003ம் ஆண்டு முதல் இந்தியாவிலும், உலககெங்கும் நகர்புற மேம்பாடு, உலகின் சிறந்த செயல்திட்டங்கள், செயல்முறைகள் மற்றும் உயர்கல்வியில் மேம்பாடு ஆகியவற்றை ஊக்குவித்து அங்கீகரிக்கும் விதமான மாநாடுகளை நடத்தி வருகிறது. எலெட்ஸ் டெக்னோமெடியாவின் 13வது உலக கல்வியியல் மாநாடு, நடப்பாண்டு மும்பையில் நடந்தது.

இம்மாநாட்டில் விநாயகா மிஷன் அலைடு ஹெல் சயின்ஸ் துறையின் டீன், டாக்டர் செந்தில்குமார் கலந்து கொண்டு, ‘உயர்நிலைக் கல்விக்கான புதுமை மற்றும் தொழில்முனைவோர் மேம்பாடு’, என்ற தலைப்பின் கீழ் கருத்துரையாற்றினார். இதில் பல்வேறு கல்லூரிகளின் துறை சார்ந்த வல்லுநர்கள் கலந்து கொண்டு, தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு ‘சிறந்த பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கான விருது’ வழங்கப்பட்டது. இந்த விருதை துறையின் டீன் டாக்டர் செந்தில்குமார் பெற்றுக்கொண்டார்.

Related Stories: