5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி விஏஓக்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்

ஆத்தூர், டிச.11: ஆத்தூரில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில், 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. ஆத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில்,

50 சதவீகித பெண் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளவர்களில் அவரவர் சொந்த மாவட்டத்தில் பணிபுரிய, மாவட்ட மாறுதல் கோருதல், விஏஒ அலுவலகங்களில் அடிப்படை வசதிகள், லேப்டாப்களுக்கு இணையதள வசதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 5அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று தொடங்கினர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில், ஆத்தூர் வட்டார தலைவர் ரகுபதி, கோட்ட செயலாளர் சக்திவேல், கெங்கவல்லி பெரியண்ணன், பெத்தநாயக்கன்பாளையம் அணைமுத்து, பொருளாளர் ஞானவேல், செயலாளர்கள் நல்லவர், முத்தையன், கிருஷ்ணமூர்த்தி, சுரேஷ் உள்பட 50க்கும் மேற்பட்ட விஏஓக்கள் கலந்து கொண்டனர்.

ஓமலூர்: ஓமலூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல், காடையாம்பட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன் 16 கிராம நிர்வாக அலுவலர்கள், காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பொதுமக்கள் வருவாய்த்துறை சார்ந்த சான்றுகளை பெறமுடியாமலும், பட்டா சிட்டாக்கள், வருமானம், குடியிருப்பு போன்ற பல்வேறு சான்றுகளை வாங்க முடியாமலும் அவதிப்பட்டனர். ஆட்டையாம்பட்டி: சேலம் தெற்கு தாலுகாவில் பணிபுரியும் கிராம நிர்வாக அலவலர்கள் 16 பேர், 5அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, பாலம்பட்டி பஸ் ஸ்டாண்டில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வட்டார தலைவர் தியாகராஜன், வட்டார செயலாளர் பிரபாகரன் மற்றும் மண்டல தலைவர் துரைசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: