கடம்பூரில் சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் கடைபிடிப்பு

கெங்வல்லி, டிச.11: சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கடம்பூரில் சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் வறுமை ஒழிப்பு சங்கத்தின் சார்பில் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் வறுமை ஒழிப்பு சங்கத்தின் உறுப்பினர் கங்காதேவி வரவேற்று பேசினார். கடம்பூர் அரசுப்பள்ளி தலைமையாசிரியர் செல்வம் விழாவில் பங்கேற்று பேசியதாவது: ஊழலானது நாடுகளின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தி பொருளாதார வீழ்ச்சியை உண்டாக்கு கிறது. எனவே, இதை தடுக்கும் நோக்கில் 2003ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தின்போது இதனை பிரகடனப்படுத்தி, ஆண்டுதோறும் டிசம்பர் 9ம் தேதி “சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்” கடைபிடிக்கப்படுகிறது.

ஊழலை தடுக்கக்கூடிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி, ஊழலற்ற சமுதாயத்தை  உருவாக்க வேண்டும். சட்டவிதிகளை பின்பற்றி ஒவ்வொருவரும் நடக்க வேண்டும். சட்ட விதிகளை மீறுதலே ஊழலுக்கு முக்கிய  காரணமாகிறது. எனவே சட்டவிதிகளுக்கு உட்பட்டு, ஊழலற்ற சமுதாயம் அமைய ேவண்டும். இவ்வாறு அவர் பேசினார். பின்னர் ஊழல் ஒழிப்பு தின உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. முடிவில் சமூக ஆர்வலர் மீனாம்பிகா அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி, நன்றி கூறினார்.

Related Stories: