×

வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு மண் மாதிரி கருத்தரங்கம்


சேந்தமங்கலம், டிச.11: செம்மேட்டில் வேளாண்மை துறை சார்பில், விவசாயிகளுக்கு மண் மாதிரி கருத்தரங்கம் நடைபெற்றது. கொல்லிமலை வட்டார வேளாண்மை துறை சார்பில், மண் வள தினத்தை முன்னிட்டு செம்மேட்டில் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சியில், வேளாண் உதவி இயக்குர் அன்புச்செல்வி கருத்தரங்கை தொடங்கி வைத்து, விவசாயிகளுக்கு மண்மாதிரி அட்டைகளை வழங்கி பேசுகையில், ‘ஆண்டுதோறும் மண்வள தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. விவசாயிகள் மண்மாதிரியை பரிசோதித்து, மண்ணுக்கு ஏற்ற விவசாயத்தை மேற்கொண்டால் நல்ல பலன் பெறலாம்.   அதே போல், ஊட்டச்சத்து குறைவாக உள்ள மண்களில் தகுந்த எருக்களை கொண்டு ஊட்டமைப்பு பயிர்களை பயிரிடலாம். மேலும், ராகி விதைப்பண்ணை அமைக்கும் திட்டங்கள் அறிந்து கொள்ளலாம்,’ என்றார். கூட்டத்தில் வேளாண் துணை அலுவலர் சேகர், உதவி அலுவலர்கள் காமராஜ், விஜயசாந்தி, செல்லதுரை, அட்மா தொழில்நுட்ப மேலாளர் ரமேஷ், கவிசங்கர் மற்றும் வேளாண் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED 19ம் தேதி விடுமுறை அளிக்க அறிவுறுத்தல்