×

தொண்டிப்பட்டியில் டாஸ்மாக் கடையை இடம் மாற்ற கோரிக்கை

நாமக்கல், டிச.11: தொண்டிப்பட்டியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு, திருச்செங்கோடு அருகே தொண்டிப்பட்டியை சேர்ந்த பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டர் ஆசியாமரியத்திடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தொண்டிப்பட்டி, குமரவேலிபாளையம் நெசவாளர் காலனியில் 400க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். ஊரில் இருந்து ஒன்றரை கிமீ தொலைவில், புதியதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது என ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்தும், அதை மீறி புதிதாக கடை திறக்கப்பட்டுள்ளது. மின்சார வசதி, தண்ணீர் வசதி எதுவும் இல்லாத நிலையில் அவசர, அவசரமாக திறந்துள்ளனர். இந்த கடை அமைந்துள்ள இடத்தின் வழியாக, மாணவ, மாணவிகள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இந்த மதுக்கடையால், இந்த வழியாக செல்லவே பெண்கள் அச்சப்படுகின்றனர். எனவே, இந்த கடையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.


Tags : shop ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி