×

லாட்ஜ் மேலாளரை மிரட்டியதாக போலி நிருபர் உள்பட 5 பேர் கைது

கிருஷ்ணகிரி, டிச.11:  கிருஷ்ணகிரி பகுதியில் பத்திரிகை நிருபர்கள் என்று கூறி, தனியார் நிறுவன உரிமையாளர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் மிரட்டி பணம் வசூலிப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, கிருஷ்ணகிரி டவுனில் உள்ள ஒரு தனியார் லாட்ஜூக்கு 5 பேர் கொண்ட கும்பல் சென்றது. அதில் ஒருவர் தான் பத்திரிக்கை நிருபர் என்றும், ஒரு குறிப்பிட்ட தொகை தரவேண்டும், இல்லையென்றால் லாட்ஜ் பெயரை கெடுத்துவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளார். இதை கேட்டு சுதாரித்துக் கொண்ட லாட்ஜ் மேலாளர் முருகேசன்(30), இங்கேயே இருங்கள் உரிமையாளரிடம் பேசிவிட்டு வருகிறேன் என்று கூறி விட்டு, கிருஷ்ணகிரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதன்பேரில், இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று, அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில், அவர்கள் கிருஷ்ணகிரி அருகே போதிநாயனப்பள்ளியைச் சேர்ந்த குப்புசாமி மகன் மூர்த்தி(40), மோட்டூர் காலனி கோவிந்தராஜ் மகன் தினேஷ்குமார்(25), வெள்ளக்குட்டை கோவிந்தராஜ் மகன் பார்த்திபன்(28), பாப்பாரப்பட்டி மணிவண்ணன் மகன் கார்த்திக்(29), மோகன்ராவ் காலனி செல்வராஜ் மகன் குணசேகர்(27) என்பது தெரியவந்தது. இதையடுத்து, 5 பேரையும் கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.

Tags : reporter ,lodge manager ,
× RELATED பல்லடம் அருகே நிருபரை கொல்ல முயன்ற...