×

ஊத்தங்கரை அருகே டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பேரணி

ஊத்தங்கரை, டிச.11:  ஊத்தங்கரை அருகே பாவக்கல்லில் நடைபெற்ற டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பேரணியில் வீடு, வீடாக நிலவேம்பு கசாயம் வழங்கினர். ஊத்தங்கரையை அடுத்த பாவக்கல் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில், டெங்கு விழிப்புணர்வு பேரணி, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நிலவேம்பு, பப்பாளி செடி வழங்குதல் மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த பேரணி, பள்ளியில் துவங்கி பாவக்கல் கிராம முக்கிய சாலையின் வழியே ஆரம்ப சுகாதார நிலையம் சென்றடைந்தது. ஆரம்ப சுகாதார நிலையத்தில், நிலவேம்பு செடி மற்றும் பப்பாளி செடிகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, பொதுமக்கள் அனைவருக்கும் வீடு வீடாக சென்று நிலவேம்பு கசாயம் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பேரணியை பள்ளி தலைமையாசிரியர் கௌதமன் தலைமையில், உதவி தலைமையாசிரியர் அவுத்தர் பாஷா கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியில் தேசிய பசுமைப்படை, ஜேஆர்சி மற்றும் மாணவ, மாணவிகள் சுமார் 400க்கும் மேற்பட்டோர், ஆசிரிய, ஆசிரியைகள் தவமணி, தமிழ்செல்வி, மாதேஸ்வரி, முத்தமிழ்செல்வி, பயிற்சி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பகுதி நேர ஓவிய ஆசிரியரும், தேசியப் பசுமை படை ஒருங்கிணைப்பாளருமான குணசேகரன் பேரணியை வழி நடத்தினார்.


Tags : Dengue prevention awareness march ,dumbangalam ,
× RELATED சூதாடிய 3 பேர் கைது