×

விபத்து களமாக மாறும் தொப்பூர் கணவாய்

தர்மபுரி, டிச.11: தர்மபுரி அருகே தொப்பூர் கணவாயில் அடிக்கடி நடக்கும் விபத்தால் வாகன ஓட்டிகள் கடும் பீதியில் உள்ளனர்.
 சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், தொப்பூர் கணவாய் பகுதி உள்ளது. மலைப்பாங்கான இந்த பகுதியில் செல்லும்போது கனரக வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாக்கும் சம்பவங்கள் அதிகம் நடக்கும். ஓசூர், பெங்களூரு பகுதியில் இருந்து கண்டெய்னர் லாரிகள் அதிகளவில் இவ்வழியாகவே செல்கின்றன. அதுமட்டுமின்றி, அதிகாலை நேரத்தில் கட்டுப்பாட்டை இழக்கும் சொகுசு பஸ்கள், அரசு பஸ்கள், லாரிகள் ஒன்றுடன் ஒன்று மோதி உயிர்பலியையும் ஏற்படுத்தி வருகின்றன.

இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் தொப்பூர் கணவாய் பகுதியை கடக்கும்போது அச்சத்துடனே செல்கின்றனர். அந்த பகுதியில் அமானுஷ்ய சக்திகள் உலாவுவதாகவும் பீதி நிலவுகிறது. நேற்று அதிகாலை ஆம்னி சொகுசு பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தீக்கிரையானது. அதிர்ஷ்டவசமாக 36 பயணிகள் உயிர்தப்பினர். டிரைவர் துரிதமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அலட்சியம் காட்டியிருந்தால் பெரிய அளவிலான அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கும். தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தொப்பூர் கணவாய் பகுதியை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா