×

20 அம்ச கோரிக்கை வலியுறுத்தி வி.ஏ.ஓ.க்கள் சங்கம் சார்பில் வேலை நிறுத்த போராட்டம்

தாம்பரம்: தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தாம்பரத்தில் நேற்று தொடங்கியது. இதில் தாம்பரம் கோட்டத்தை சேர்ந்த ஏராளமான கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். இது தொடர்பாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் ஜானகிராமன் கூறுகையில், ‘‘தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக மாவட்டம் மாறுதல், பெண் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அடிப்படை வசதி செய்துதர வேண்டும், ஆன்லைன் சான்றிதழ் வழங்க இணையதளம் மற்றும் கணினி வசதி வேண்டும் உட்பட 20 அம்ச கோரிக்கைகளுக்காக இந்த போராட்டம் நடைபெறுகிறது’’ என்றார்.

Tags : strike ,VAOs Association ,
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து