×

தேவாலய சீரமைப்பு பணிக்காக அரசு நிதி உதவிக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அறிவிப்பு

சென்னை: கிறிஸ்தவ தேவாலயம் பழுதுபார்த்தல், சீரமைத்தல் பணிகள் மேற்கொள்ள அரசின் நிதி உதவி திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று  சென்னை கலெக்டர் அறிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் சண்முக சுந்தரம் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாட்டில் சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கும் திட்டம் 2016-17ம் ஆண்டு முதல் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் நிதி உதவிபெறுவதற்கான தகுதிகள்:

* கிறிஸ்தவ தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டிடத்தில் இயங்கி இருத்தல் வேண்டும். தேவாலயம் கட்டப்பட்ட இடம்  பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். தேவாலயமும் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
* தேவாலயத்தின் சீரமைப்பு பணிக்காக வெளிநாட்டிலிருந்து எவ்வித நிதி உதவியும் பெற்றிருத்தல் கூடாது.
* சீரமைப்பு பணிக்காக ஒருமுறை நிதி உதவி அளிக்கப்பட்ட தேவாலயத்திற்கு மறுமுறை நிதி உதவி 5 ஆண்டுகளுக்கு பின்னர் வழங்கப்படும்.

இதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் சான்றிதழ் இணையதள முகவரியில் www.bcmbcmw@tn.gov.in ல் வெளியிடப்பட்டுள்ளது.  இதனை படியிறக்கம்  செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவத்தை அதிலுள்ள பிற்சேர்க்கை-1, 2 உள்ளவாறு பூர்த்தி செய்து அனைத்து உரிய ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களோடு மாவட்ட ஆட்சித் தலைவருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.மாவட்ட ஆட்சித் தலைவரால் பரிந்துரை செய்யப்படும்  நிதி உதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக் கணக்கில் மின்னணு  பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : Collector ,
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...