×

அங்கன்வாடி கட்டிடத்தின் கட்டுமான பொருள்கள் தரமற்றதாக புகார்

ராமநாதபுரம், டிச.11: திருப்புல்லாணி ஒன்றியம் காஞ்சிரங்குடி ஊராட்சி அலவாக்கரைவாடி முன்னாள் கவுன்சிலர் தனசேகரன் தலைமையில் கலெக்டரிடம் அளித்த மனுவில், ‘‘எங்கள் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி பள்ளிக்கான புதிய கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கட்டிடத்திற்கு போதுமான சிமென்ட் போடாமலும் சவடு மண் கலந்து பில்லர் போடுவதால் கட்டிடம் போலியாக கட்டப்படுவது போல் தெரிகிறது. கலெக்டர் புதிய கட்டிடப் பணிகளை நேரடியாக ஆய்வு செய்து தரமான பொருள்கள், மணல்கள் வைத்து கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : building ,Anganwadi ,
× RELATED சாத்தான்குளத்தில் காட்சிப்பொருளான பழைய அங்கன்வாடி மைய கட்டிடம்