×

என்எஸ்எஸ் மாணவர் சேர்க்கையில் தமிழகம் தொடர்ந்து முதலிடம் மண்டல ஒருங்கிணைப்பாளர் தகவல்

காரைக்குடி, டிச. 11: என்எஸ்எஸ் மாணவர் சேர்க்கையில் இந்திய அளவில் தமிழகம் தொடர்ந்து 3 ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது என மண்டல ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார். காரைக்குடி அழகப்பசெட்டியார் அரசு பொறியியல் கல்லூரியில் என்எஸ்எஸ் மாணவர்களுக்கான தேசிய ஒருமைப்பாட்டு முகாம் துவக்க விழா நடந்தது. கல்லூரி ஒருங்கிணைப்பாளர் லோகநாதன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் இளங்கோ தலைமை வகித்தார். துணை முதல்வர் கணேசன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியை துவக்கி வைத்து மண்டல ஒருங்கிணைப்பாளர் சாமுவேல் செல்லையா பேசுகையில், மத்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் சார்பில் நாடு முழுவதும் 15 இடங்களில் இதுபோன்ற முகாம்கள் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் இக்கல்லூரியில் நடத்தப்படுகிறது. 12 மாநிலங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். இதில் 7 நாட்கள் நடக்கும் முகாமில் தியானம், தேசிய ஒருமைப்பாடு, நாட்டின் சட்டம் குறித்து பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.

மேலும் நடன போட்டி, மாநிலங்களுக்கான கலைநிகழ்ச்சிகள், பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்படும். இதன் மூலம் மாணவர்களின் தனித்திறமைகள் வெளிப்படுவதோடு, பலதரப்பட்ட மாநில பழக்க வழக்கங்கள், மொழியை கற்றுக்கொள்ள வாய்ப்பாக அமையும். நாட்டில் உள்ள 15 மண்டலங்களில் 40 லட்சம் மாணவர்கள் உள்ளன. தமிழகத்தில் 4 லட்சம் மாணவர்கள் உள்ளனர். மாணவர்களின் எண்ணிக்கையில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக தமிழகம் முதலிடத்தில் உள்ளது. என்எஸ்எஸ் மாணவர்களுக்கு மலை ஏறுதல், பனிச்சறுக்கு உள்பட பல்வேறு சாகச பயிற்சிகள் இமாச்சல் பிரதேசத்தில் வழங்கப்படுகிறது என்றார்.
முடிவில் அண்ணா பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

Tags : student ,Tamil Nadu ,NSS ,informant ,
× RELATED சிவில் சர்வீஸ் தேர்வில் போட்டிகள்...